பா.ம.க. கூட்டணிதான் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் : ராமதாஸ்

மயிலம்:

         பா.ம.க., இன்றைக்கு இளைஞர்களையும், இளம்பெண்களையும் அதிகமாக நம்பியுள்ளது என, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசினார். மயிலம் சட்டசபை தொகுதி பா.ம.க., கிளை நிர்வாகிகள் கூட்டம் ரெட்டணை கிராமத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
பேசியது 

            பா.ம.க., இன்றைக்கு இளைஞர்களையும், இளம்பெண்களையும் அதிகமாக நம்பியுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் இளைஞர், இளம்பெண்கள் பயிற்சிக் கூட்டங்கள் நடந்து வருகிறது. மயிலம் சட்டசபை தொகுதியில் பா.ம.க.,விற்கு 269 கிளைகள் உள்ளது. இதில் 60 கிளைகள் தலித் சமுதாய மக்களின் கிளைகளாகும். நமது நாட்டில் 500க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. இதில் வன்னியர்கள் மட்டும் தமிழகத்தில் 2.5 கோடி பேர் உள்ளனர். இது வரையில் வன்னியர்கள் முதல்வர்களாக வர முடியவில்லை.

              வரும் சட்டசபை தேர்தலில் மாற்றுக் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.  தினமும் நிர்வாகிகள் ஒன்றுகூடி அரசியல் நிலை, கட்சி வளர்ச்சிப் பணிகள், கிராமத்தின் வளர்ச்சி பற்றி ஆலோசிக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க., ஆதரவில்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது.

                    வரும் பொங்கலுக்குப் பிறகு தான் பா.ம.க., எந்த கட்சியுடன் கூட்டணி என்பது தெரியும். பா.ம.க., உள்ள கூட்டணி தான் அதிக இடங்களை வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார்.

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

உலகின் 5 கோடி(தமிழ்நாட்டில் 2.5 கோடி) வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், தென் தமிழ்நாட்டின் பாசத்துக்குரிய தலைவர், பாண்டிச்சேரியின் ஆளப்பிறந்த மைந்தன், ரயில்வே மற்றும் மருத்துவ துறையில் செம்மை படைத்த கட்சி நிறுவனர், 1987 ல் சமூகநீதி புரட்சி கண்ட புரட்சிவேந்தன், சமூக நீதி காத்த செம்மல், மிகவும் பிற்பட்ட மக்களின் இதய தெய்வம், கல்விக்கோயில் கட்டிய பெருமான், தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் & பித்து கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஒரே அரசியல் சாணக்கியன் , நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, சத்ரிய வம்சத்தின் ஒளிவிளக்கு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க