பாமகவில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட புதுமுகங்களுக்கு வாய்ப்பு

சென்னை:
           தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ம.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? எந்தெந்த தொகுதிகளை கேட்பது என்பது பற்றி கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த தேர்தலில் பா.ம.க. 31 தொகுதிகளில் போட்டியிட்டது. 

அதில் 

செங்கல்பட்டு, 
ஆற்காடு, 
பெரணமல்லூர், 
தாரமங்கலம், 
காஞ்சிபுரம், 
முகையூர், 
எடப்பாடி, 
மேல் மலையனூர், 
ஓமலூர், 
கபிலர்மலை, 
பூம்புகார், 
மேட்டூர், 
திருப்போரூர், 
காவேரிப்பட்டினம்,
பவானி, 
திருப்பத்தூர், 
தருமபுரி, 
பண்ருட்டி 

                    ஆகிய 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த முறை தோல்வியடைந்த தொகுதிகளில் தோல்விக்கான காரணம் பற்றி ஆய்வு செய்துள்ளனர். தொகுதி மறுசீரமைப்பில் சில தொகுதிகள் மாறி உள்ளன. வெற்றி பெற்ற தொகுதிகளை உறுதியாக கேட்கவும், மேலும் உள்ள 13 தொகுதிகளில் சில தொகுதிகளை மாற்றி கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

            சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பா.ம.க. பிரதிநிதித்துவத்தை விரும்புகிறது. 


எனவே

சென்னையில் 

திரு.வி.க.நகர் (தனி), 
அண்ணாநகர், 
வேளச்சேரி, 
மைலாப்பூர் 

               ஆகிய 4 தொகுதிகளை கேட்கப்போவதாக கூறப்படுகிறது. தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் 8 முதல் 10 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை அவர்களுக்கு பதிலாக புதுமுகங்களை களத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


0 கருத்துகள்: