சேத்தியாத்தோப்பு :
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க., போட்டியிட வேண்டும் என பா.ம.க. தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பா.ம.க.,வில் சீட் பெற கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய சட்டசபை தொகுதி புவனகிரி. கடந்த லோக்சபா தேர்தலில் இப்பகுதிகளில் பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமி கூடுதல் வாக்குகளை பெற்றார். கடந்த ஒரு ஆண்டாக பா.ம.க வளர்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்தி வந்தது.
இந்நிலையில் தி.மு.க., கூட்டணியில் 31 தொகுதிகளை பெற்றுள்ள பா.ம.க.நிர்வாகிகள் புவனகிரி தொகுதியில் போட்டியிட ஆர்வம் கொண்டுள்ளனர். கடந்த தேர்தலில் தோல்வியடைந்த தேவதாஸ் படையாண்டவர், முன்னாள் மாவட்டச் செயலர்கள் முதல் ஒன்றிய செயலர்கள் வரை 25க்கும் மேற்பட்டோர் வன்னியர் சங்கத் தலைவர் குரு, வேல்முருகன் எம்.எல்.ஏ., மாநிலத் தலைவர் மணி ஆகியோர் மூலம் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்
இவர்கள் மட்டுமின்றி துணை பொதுச்செயலர் திருமால்வளவன், மாநில துணைத் தலைவர் சவுந்திரபாண்டியன், கடந்த 2001 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட அறிவுச்செல்வன் ஆகியோரும் போட்டியிட விருப்பம் கொண்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக