பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் மூத்த மகள் காந்தி அம்மை- பரசுராமன் தம்பதியரின் மகன் டாக்டர் சுகந்தனுக்கும் ராணிப்பேட்டை சாந்தி-குணசேகரன் தம்பதியரின் மகள் டாக்டர் டீனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் திருமணம் நாளை காலை சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை எம்.ஆர்.சி. நகரில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. திருமண விழாவில் முதலமைச்சர் கருணாநிதி மணமக்களை நேரில் வாழ்த்துகிறார். துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள். பேரன் திருமண அழைப்பிதழை டாக்டர் ராமதாஸ் கைப்பட எழுதி உள்ளார்.
திருமண விழாவுக்கு வரும் அனைவரையும் டாக்டர் ராமதாஸ்- சரசுவதி ராமதாஸ், சாந்தி- குணசேகரன் குடும்பத்தினர் வரவேற்கிறார்கள். இன்று இரவு மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணியின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக