கோபாலபுரம் :
திமுக கூட்டணியில் பாமக இடம் பெறும் என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் பேசிய முதல்வர் கருணாநிதி, திமுக கூட்டணியில் பாமக இடம் பெறும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக