பா.ம.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விண்ணப்ப மனு

சட்டசபை தேர்தலில் போட்டியிட 

 

 விண்ணப்ப மனு கொடுத்த பா.ம.க.வினர்


 திண்டிவனம்:
 
               தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புகின்றவர்களிடம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில்  விண்ணப்ப மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

            
 
            இதையொட்டி  ஏராளமான பா.ம.க.வினர் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்திருந்தனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.10 ஆயிரம் செலுத்தி விண்ணப்பித்தனர். பா.ம.க. மாநில அமைப்பு செயலாளர் இசக்கி, மாநில துணை தலைவர் கருணாநிதி, உழவர் இயக்க தலைவர் சடகோபன் ஆகியோர் விண்ணப்ப மனுக்களை வாங்கினார்கள். இந்த விண்ணப்பம் வருகிற 7-ந்தேதி வரை பெறப்படுகிறது.    

0 கருத்துகள்: