அதிமுகவின் தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது


              அதிமுகவில் இருந்து திமுக சென்ற இரண்டு எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயங்கொண்டம், கோவில்பட்டி தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்தத் தொகுதிகளில் ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திரனும், கோவில்பட்டியில் ராதாகிருஷ்ணனும் வெற்றி வாகை சூடினர். இருவரும் அதிமுக அணியில் இருந்து அண்மையில் திமுகவுக்குத் தாவினர். அதிகாரப்பூர்வமாக அறிவித்து கட்சி மாறினால் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் என்ற  நிலையில் பேரவைச் செயல்பாடுகளில் திமுகவினராக இருந்தனர்.  

தொகுதிகள் பறிப்பு: 

                திமுக பிரமுகர்களாக இருப்பதால், தாங்கள் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் தொகுதிகள் மீண்டும் தங்களுக்கு ஒதுக்கப்படும் என அவர்கள் இருவரும் எதிர்பார்த்தனர்.  ஆனால், ஜெயங்கொண்டம், கோவில்பட்டி ஆகிய இரு தொகுதிகளும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இடதுசாரிகள், மதிமுக செல்வாக்கு பெற்ற கோவில்பட்டி தொகுதி பாமகவுக்கு அளிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவில்பட்டி பகுதியில் தண்ணீர் பிரச்னை தொடர்கதையாக உள்ளது. இதைத் தீர்ப்பதில் திமுக அரசு தவறி விட்டதாக பரவலான குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், அந்தத் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: