தஞ்சை:
தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களின் பா.ம.க. இளைஞர் சங்க பொறுப்பாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா கும்பகோணத்தில் நடைபெற்றது. மாநில இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.
விழாவில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது,
"எதிர்காலமே இளைஞர்கள் கையில்தான் உள்ளது. இளைஞர் சக்தியை கொண்டு தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவேண்டும். வருங்காலத்தில் நம்கட்சியை இளைஞர்கள்தான் வழிநடத்தப் போகிறீர்கள். இளைஞர்களை நம்பிதான் நானும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.கவும் உள்ளது.
வன்னியர் சங்கத்திற்கு எப்படி தனித்துவம் உள்ளதோ, அதே போன்று இளைஞர் சங்கத்திற்கு தனித்துவம் உண்டாக்கப்படும். மேலும் இந்த இளைஞர் சங்கத்தை பதிவு செய்யப்போகிறேன். குறிப்பாக இளைஞர் சங்கத் திடம் எதிர்பார்ப்பது ஒழுக்கம், கட்டுப்பாடு, உண்மையான உழைப்பு ஆகிய மூன்றை மட்டுமே. இந்த மூன்றையும் செய்தால் பதவி உங்களை தானாக தேடிவரும். இளைஞர் சங்கத்திற்கு தனியாக ஒதுக்கீடு கொடுங்கள் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடம் நான் கேட்டேன். அவரும் தருவதாக கூறிவிட்டார்.
நாம் 10 கட்டளைகளை முதலில் கடைப்பிடிக்க வேண்டும். அந்த கட்டளைகள் படி நடப்பேன் என சத்தியம் செய்யவேண்டும்.

எல்லோருக்கும் தரமான ஒரே சீரான கட்டணமில்லாத சமச்சீர் கல்வி,
சமூக நீதி,
தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு,
படிப்பகங்களை உருவாக்குதல்,
வன்முறை,
தீவிரவாதம்,
ஆபாசம்,
பெண் அடிமை அகற்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும்,
கல்வியில் நீதி,
சமூக நீதி,
வரதட்சணை கொடுமை,
மது, பான்பராக் போன்ற போதை பொருட்களை அகற்றுவது
போன்ற 10 கட்டளைகளை நாம் கடைப் பிடிக்க வேண்டும்.
இளைஞர் சங்கத்தினர் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும். முதலில் நாம் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். பசுமையான சூழ்நிலை உருவாக மரம் நடவேண்டும். வித்தியாசமான புதுமையான அரசியலை உருவாக்க போகிறோம்.
2011-ம் ஆண்டு இளைஞர் சங்கத்தின் ஆண்டு. இளைஞர் சக்தி முழுமையான சக்தியாகும். வேகமான செயலாக்கம் மட்டுமே எனக்கு தேவை. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 1000 இளைஞர்கள் 300 இளம் பெண்கள் உள்பட மொத்தம் 1300 பேரை தேர்வு செய்ய வேண்டும். ஒரு கிராமத்தில் 3 இளைஞர்கள், ஒரு இளம்பெண் இருந்தால் அந்த 1300 பேரில் 100 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விஞ்ஞான ரீதியில் பயிற்சி அளித்து அரசியல் செய்யப்போகிறோம்’’என்று பேசினார்.,

| |