உலகரட்சகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகரட்சகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாமகவுக்கு ஆதரவாக மதிமுகவினர் பிரசாரம்

காஞ்சிபுரம்:

             காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கடைசி நேர திருப்பமாக பாமகவுக்கு ஆதரவாக மதிமுகவினர் பிரசாரத்தில் இறங்கி களப்பணியாற்றி வருகின்றனர். இதனை எதிர்பாராத அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.  

            காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாமக சார்பில் முன்னாள் செய்யாறு எம்எல்ஏ உலகரட்சகனும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரமும் போட்டியிடுகின்றனர். இரு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் இங்கு வெற்றி-தோல்வி கணிக்க முடியாத நிலையில் உள்ளது.  இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக, தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தது. இதனால் தேர்தல் நேரத்தில் இவர்கள் யாரை ஆதரிப்பர் என்பது புதிராய் இருந்தது.  

             இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாமக ஆதரவாக மதிமுகவினர் பிரசாரத்தில் குதித்துள்ளனர். காஞ்சிபுரம் மதிமுக நகர செயலர் வளையாபதி தலைமையில் மதிமுகவினர் வீதிவீதியாகச் சென்று பாமகவுக்கு வாக்குச் சேகரித்தனர். நகர இளைஞர் அணி பொன்மொழி உள்ளிட்ட பலர் இப் பிரசாரத்தில் பங்கேற்றனர்.  

இது குறித்து மதிமுக நகரச் செயலர் வளையாபதி கூறியது:  

               நான் தனியாக முடிவெடுத்து பாமகவை ஆதரிக்கவில்லை. எங்கள் மேலிடத்தில் இருந்து பாமகவை ஆதரிக்கும்படி கூறியுள்ளனர். அதன்படி நாங்கள் பாமகவுக்கு வாக்குச் சேகரித்தோம். கிராமப்புற பகுதிகளில் உள்ள எங்கள் கட்சித் தொண்டர்களும் பாமகவுக்கு வாக்குச் சேகரித்து வருகின்றனர் என்றார்.  காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாமகவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கும் மதிமுக நகர செயலர் வளையாபதி.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

காஞ்சிபுரம்:"

           "ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நிறுத்தி விடுவார்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் அன்புமணி ராமதாஸ் பா.ம.க., வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து பேசியது:

           காஞ்சிபுரத்தில் வெற்றி பெற்றால் தான் கருணாநிதி ஆட்சி அமைக்க முடியும். கருணாநிதி வெற்றி பெற்றால் பல்வேறு திட்டங்கள் வந்து சேரும்.
 
           10 ஆண்டுகள் ஆட்சி செய்த ஜெயலலிதா ஆட்சியில் ஏதேனும் திட்டங்களை நிறைவேற்றியுள்ளாரா? விஜயகாந்த் வேட்பாளர்களை அடிக்கிறார். ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சேர்ந்து பிரசாரம் செய்தால், நம்மை அடித்து விடுவார் என்ற பயத்தில் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை."ஆப்' அடித்தால் ஆப்பு அடிப்பேன் என்றார். ஒரு தலைவர் என்றால் ஒழுக்கமானவராக இருக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்களை, ஜெயலலிதா நிறுத்துவது வழக்கமாக உள்ளது.
 
             கருணாநிதி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கினார். நெசவாளர்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கினார். மக்களின் பசியை போக்கியவர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதா ஆடு, மாடு இலவசமாக தருகிறேன் என்கிறார். நம் பிள்ளைகளை ஆடு, மாடு மேய்க்க சொல்கிறார். எனவே, நீங்கள் மாம்பழ சின்னத்திற்கு வாக்களியுங்கள்.இவ்வாறு அன்புமணி பேசினார்.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாக்குச் சேகரிப்பு

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து பேசுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ் (இடமிருந்து 2-வது).
காஞ்சிபுரம்:
 
         காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் வாக்குச் சேகரித்தார்.
 
இது தொடர்பான பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்  பேசியது: 

              தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்தபோது தேர்தல் ஆணையத்திடம் நேர்மையும் பாரபட்சமற்றத் தன்மையும் இருந்தது. தற்போது தேர்தல் ஆணையத்திடம் அந்த நேர்மை இல்லை. தமிழகத்தில் மட்டுமே கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்தச் சோதனைகளை சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களில் ஏன் தேர்தல் ஆணையம் நடத்தவில்லை.மதுரை மாவட்ட ஆட்சியராக உள்ள சகாயம் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்கிறார். ஆர்.டி.ஓ. மிரட்டி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது புகார் கொடுக்கச் சொல்கிறார். 
 
              ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதா அவர் வேலை. தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. நான் செல்லும் இடங்களில் என்னுடன் வருபவர்களை வைத்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளேன். அனைவருமே திமுகவுக்கு ஆதரவான கருத்துகளைத்தான் சொல்லி வருகின்றனர்.இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும்... திமுக தலைமையிலான கருணாநிதி ஆட்சியில் செய்தவை எல்லாம் இனியவை நாற்பது. அதிமுக ஆட்சி செய்தவை எல்லாம் இன்னா நாற்பது. கிராமப்புறப் மாணவர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தார் கருணாநிதி. அதனை ஜெயலலிதா 25 சதவீதமாக உயர்த்தினார். 
 
               சிலர் நீதிமன்றம் சென்றபோது இடஒதுக்கீடே கிராமப்புற மாணவர்களுக்கு இல்லாத சூழ்நிலை உருவாக்கிவிட்டது. அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டபோது நான், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் அதனை கடுமையாக எதிர்த்தோம். ஆனால் அதிமுகவில் இருந்து யார் இதனை எதிர்த்தனர்.அதிமுக கூட்டணியில் நிதானமிழந்துப் பேசி வரும் நடிகர் ஒருவர் ஆஃப் அடித்துவிட்டு எங்களுக்கு ஆப்பு அடிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். அவர் ஆஃப் அடித்தாலும் சரி இல்லை ஃபுல் அடித்தாலும் சரி எங்களை அவரால் ஒன்றும் செய்ய முடியாது. 
 
                நாங்கள் அரிதாரம் பூசிக் கொண்டு மாலை 5 மணிக்கு மேல் மேடையில் தோன்றுபவர்கள் அல்ல.வேட்பாளரை மேடையில் அடிப்பவர் நாளை எம்எல்ஏ ஆனால் சட்டப் பேரவைத் தலைவரைக் கூட அடிப்பார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது முற்றிலும் சரியானது என்றார் ராமதாஸ்.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம்: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ப்பு

காஞ்சிபுரம்:
 
          திமுக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதும் 5 ஆண்டுகள் பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

                காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்படி திமுக மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்,

                    திமுக அரசின் சாதனைகளும், தேர்தல் அறிக்கையுமே 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெற வைக்கும். திமுக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதும் 5 ஆண்டுகள் பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்றார்.