எடப்பாடி சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எடப்பாடி சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பா.ம.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், வை.காவேரி மற்றும் மேச்சேரி மே.ப.காமராஜ் கட்சியில் இருந்து நீக்கம்

 பா.ம.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,


            ‘’பா.ம.க. கட்சியின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த எடப்பாடி தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான வை.காவேரி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மேச்சேரி மே.ப.காமராஜ் ஆகியோர் கட்சி கட்டுப்பாடை மீறி கட்சிக்கு அவப்பெயரும், களங்கமும் உண்டாக்கும் வகையில் செயல்பட்டுவருவதால், இவர்களை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆலோசனைப்படி கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதலான அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். பா.ம.க.வினர் யாரும் இவர்களோடு எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.
 

எடப்பாடி சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் மு.கார்த்தி தேர்தல் செலவு கணக்கு அளித்தார்

           தமிழக சட்டமன்றத்  தேர்தலில் வேட்பாளர்கள் ஒவொருவரும் 16, இலட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்திருந்தது. 
          கடைசி கட்ட தேர்தல் கணக்கை ஒப்படைக்க கடைசி நாளான நேற்று, எடப்பாடி தொகுதியின் தேர்தல் அலுவலரிடம் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை கொடுத்தார்கள் அதில் தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் பழனிசாமி 5,48,226 ரூபாயும்,  பா.ம.க. வேட்பாளர் கார்த்தி  5,77,778 ரூபாயும், பா.ஜ.க வேட்பாளர் தங்கராஜ் , 1,66,022 ரூபாயும், செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளர்கள்.