பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது வெறும் கனவாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டாவது இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மாநிலங்களவையில் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், மக்களவையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. அதை போக்கும் வகையில் உள்ஒதுக்கீட்டுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை கொண்டுவந்து மகளிருக்கு அரசியல் அதிகாரம் வழங்க முன்வருவோம். மகளிர் தினம் கொண்டாடும் இன்றைய நாளில் ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கு கட்டாயக்கல்வியும், கட்டாய வேலைவாய்ப்பும் கிடைக்க வேண்டும். வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் கடமை உணர்வோடு இதை நிறைவேற்றி முடிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்’’என்று கூறியுள்ளார்.