சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் மு.இளஞ்செழியன் மதுரையில் படுகொலை: பதட்டம் காரணமாக போலீஸ் குவிப்பு

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_2NxtuHhijhy8zFUVgQPY9HPi4nfsy54NiBuLcwhES6rpjYfcXNTGk_eT50MDQhkpp525s7jUJxr0oLIrZWVv0IA0gsRPOAiCfXDRR7-THMNPb_YWUTEamyDnvWzl5hQxb-4F8wXO9mc/s320/Sholavandan+-+M.+Elanchelian+PMK.gif


          
            

 "காவல்துறையே குற்றவாளிகளை 

உடனடியாக கைது செய்"
 
          பாமக மாநில துணைப் பொதுச்செயலாளரும்  கடந்த  சட்டமன்ற தேர்தலில் மதுரை சோழவந்தான்  தொகுதியில் திமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக நிறுத்தப்பட்டார் திரு. மு. இளஞ்செழியன்.
         இன்று அதிகாலையில் மதுரை எஸ்.எஸ்.காலனி அருகே பைபாஸ் ரோடில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது, திரு. மு.இளஞ்செழியன் வீட்டின் வாசலில் நின்ற ஒரு கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கொலைக்கு காரணமான கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் இளஞ்செழியன் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, மதுரை பகுதியில் பதட்டமாக உள்ளது.


சோழவந்தான் பா.ம.க. வேட்பாளர் மு.இளஞ்செழியனை ஆதரித்து பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம்

வாடிப்பட்டி:
  
                சோழவந்தான் பா.ம.க., வேட்பாளர் இளஞ்செழியனை ஆதரித்து வாடிப்பட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க.,மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட காங்.,தலைவர் செல்வராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். 

அப்போது  பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் பேசியது:

                "கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்' என திருவாரூர் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசினார். நன்றிக் கடனாக நாங்கள், வட மாவடங்களில் கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம். ஜெயலலிதா, "வரும் காலங்களில் மக்கள் கையேந்தும் நிலை மாறும்' என குறிப்பிட்டுவிட்டு, தேர்தல் அறிக்கையையை வெளியிட்டுள்ளார். 

                  வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு நான்கு ஆடு, ஒரு பசுமாடு வழங்கப்படும் என்கிறார். 30 லட்சம் பேருக்கு ஒரு கோடி 70 லட்சம் ஆடுகளை எப்படி உற்பத்தி செய்ய முடியும்? நடைமுறை சாத்தியம் இல்லாதது. இத்தேர்தலுடன் ஜெ., அரசியல் வரலாறு முடிவுக்கு வரும். என்றார். பா.ம.க., மாவட்டச் செயலாளர் கிட்டு, தி.மு.க.,ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், நகர் செயலாளர் பால்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் அயூப்கான் பங்கேற்றனர்.

சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மு.இளஞ்செழியன் வேட்பு மனு தாக்கல்

மதுரை : 

            மதுரை மாவட்டம், சோழவந்தான் (தனி) தொகுதியில் மனு தாக்கல் செய்த பா.ம.க., வேட்பாளர் மு.இளஞ்செழியன் தனக்கும், மனைவி கிருஷ்ணவேணிக்கும் ரூ.1.20 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அவர் தேர்தல் அதிகாரி சரஸ்வதியிடம் மனு தாக்கல் செய்தார்.

சோழவந்தான் (தனி)தொகுதியில் மனு தாக்கல் செய்த பா.ம.க., வேட்பாளர் மு.இளஞ்செழியன் தாக்கல் செய்த சொத்து பட்டியல்: 

               இளஞ்செழியனுக்கு கையிருப்பாக ரூ. 10 லட்சம், வங்கி இருப்பாக 6 வங்கிகளில் ரூ. ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 632 உள்ளது. ரூ. 10. 24 லட்சம் மதிப்புள்ள டாடா சபாரி கார், ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் தங்க நகைகள் என மொத்தம் ரூ. 29 லட்சத்து 26 ஆயிரத்து 532 உள்ளது. 3.5 சென்ட் நிலத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான வீடும், ரூ. 5 லட்சத்து 65 ஆயிரத்து 501 மதிப்பிலான நிலங்களும் உள்ளன. அவரது மனைவி கிருஷ்ணவேணி பெயரில் ரூ. 48 லட்சம் மதிப்பிலான 2,400 கிராம் தங்க நகைகள், ரூ. 1.5 லட்சம் கையிருப்பு, ரூ. 38 ஆயிரத்து 567 வங்கியிருப்பு, ரூ. 9 லட்சத்து 45 ஆயிரத்து 527 மதிப்புள்ள 10.85 ஏக்கர் நிலம் உள்ளது.