தமிழக மாணவர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக மாணவர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழக மாணவர் சங்கம் சார்பில் கல்விக் கட்டண கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்ப்பு





கல்வி கட்டணக் கொள்ளையை தடுக்க கல்லூரிகள், பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் பேச்சு


















சென்னை:

  
         தமிழக மாணவர் சங்கம் சார்பில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் கட்டண உயர்வை கண்டித்து சென்னை மெமோரியல் ஹால் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியது:-

             கல்விகண் கொடுத்தவர் காமராசர். அந்த காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான், ஜனாதிபதிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், பல உயரிய பொறுப்புகளில் பதவிக்கு வந்தனர். காமராஜரின் ஆட்சிக்கு பிறகு நர்சரி பள்ளி, மெட்ரிக்குலேசன் பள்ளி எப்படி உருவானது? ஏழைகள் பணக்காரர்களுக்கு என்று கல்வி பிரிக்கப்பட்டது எப்படி? கல்விக் கட்டண கொள்ளைக்கு துணை போனவர்கள் ஆட்சியாளர்கள்தான்.

            இப்போது நடைபெறும் கல்வி கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஒரே வழி பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அவசர சட்டத்தின் மூலம் அரசுடமை ஆக்க வேண்டும். அரசே அனைவருக்கும் தரமான கல்வியையும், கட்டணம் இல்லாத கல்வியையும் கட்டாய கல்வியையும் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தர்ம சிந்தனையோடு லாப நோக்கம் இல்லாமல் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறோம் என்று ஒருவர் கூட சொல்ல முடியாது. வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அரசு அவசர சட்டம் கொண்டு வந்து, பள்ளிகளை அரசுடமை ஆக்க வேண்டும். பாட்டாளி மாணவர்கள் சங்கத்தினர் அரசே கல்வி கொடு, அரசே கல்விக் கூடங்களை நடத்து என்ற முழக்கத்தோடு எல்லா மாவட்டங்களிலும், போராட்டம் நடத்துங்கள். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

            ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், ஜெயராமன், பாரிமோகன், சரவணன், செஞ்சி ரவி, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முழுமையான சமச்சீர்கல்வியை நடைமுறைப் படுத்திட அரசு முயற்சிக்க வேண்டும்: இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

            சமச்சீர் கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைபடுத்த வேண்டும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.

இது குறித்து  இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலத்தலைவர் கே.எஸ்.கனகராஜ் மற்றும் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

         "சமச்சீர் கல்விக்கான பொதுப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடநூல்களை நடப்பு கல்வியாண்டில் நடைமுறைபடுத்த வேண்டுமெனவும். இந்தாண்டு சமச்சீர்கல்வியை ரத்து செய்யும்வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாவிற்கு இடைக்கால தடைவிதித்தும் சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திடமுயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 
         சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் தரம் குறைந்துள்ளது மாணவர்களின் திறன்களை வளர்க்கும் விதத்தில் பாடத்திட்டமும்,பாடநூல்களும் இல்லை என்று கூறி இந்தாண்டு பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது.  இதற்கான சட்ட மசோதவும் நிறைவேற்றப்பட்டது.  இந்நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கடும்போராட்டத்தையும் நடத்தினர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலவழக்கின் தீர்ப்பு மக்களின் எதிர்பார்ப்பை, விருப்பத்தை நிறைவேற்றும் தீர்ப்பாகஅமைந்துள்ளது.

          சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தில் எந்த அடிப்படையில் தரம் குறைந்துள்ளது என்பதை அரசு இதுவரை தெளிவுபடுத்தாத நிலையில் சமச்சீர்கல்விக்கான பாடநூல்களில் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிட உயர்நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. ஆகவே தமிழக அரசு சமச்சீர் கல்விக்கானபொதுப்பாடத்திட்டதை 1 முதல் 10ம் வகுப்பு வரை நடைமுறைப் படுத்திக்கொண்டே பாடநூல்களில்உள்ள தவறுகளை,குறைகளை களைந்திட வேண்டுமென இந்திய மாணவர் சங்கம்வலியுறுத்துகிறது.
 
         மேலும் ஜீன் 15ல் திட்டமிட்டபடி பள்ளிகளை திறந்திட வேண்டுமெனவும் மாணவர்களின் நலனை கருதாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு என்ற அரசின் முடிவுகோடிக்கணக்கான மாணவர்கள் ,பெற்றோர்களை பெரும் குழப்பத்திற்கு ஆளாக்கிடும்,  எனவே அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப் படுத்துவதோடு படிப்படியாக முழுமையான சமச்சீர்கல்வியை நடைமுறைப் படுத்திட அரசு முயற்சிக்க வேண்டும் மேலும் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் நீதிமன்ற உத்தரவையும் அரசின் விதியையும் மீறி பல்லாயிரக்கணக்கில் கட்டணங்களை வசூலிப்பதால் பெற்றோர்களும் மாணவர்களும் செய்வதறியாதுபுலம்பி வருகின்றனர்.
 
          தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை சமாளிக்க முடியாமல் மனமுடைந்து கோவையை சேர்ந்த உண்ணிகிருஷ்னன் தனது மகன் மற்றும் மகளுக்கு கட்டணம் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கோவை பெர்க்ஸ் பள்ளி 1ம்வகுப்பு மாணவனுக்கு கட்டணம் செலுத்த முடியாததால் அவரது தாய் தற்கொலை செய்துகொண்டார்என்பது குறிப்பிடதக்கது. தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளை மிகப்பெரிய சமூககொடுமையாகமாறிவிட்டது. தடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வேதனைக்குறியது. ஆகவே தனியார்பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக அரசை இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது’’ என்று தெரிவித்துள்ளனர்.


சூன் 17ல் கல்விக் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து தமிழக மாணவர் சங்கம் சார்பில் போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு


            கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் ஜூன் 17ஆம் தேதி நடைபெறுகிறது என்றும், இந்த போராட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும், தமிழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக மாணவர் சங்க செய்திக் குறிப்பில்,

             கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிரான தமிமிழக மாணவர் சங்கத்தின் போராட்டம் வரும் ஜூன் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 11 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள நினைவரங்கம் அருகில் இந்தப் போராட்டம் நடைபெறும்.
இப்போராட்டத்தில் தமிழக மாணவர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து தமிழக மாணவர் சங்கம் சார்பில் ஜூன் 15-ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ்

           அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதை தமிழக அரசு தடுக்கக் கோரி தமிழக மாணவர் சங்கம் சார்பில் ஜூன் 15-ம் தேதி சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

             தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை பாமக நடத்தியிருக்கிறது. இதனால் கல்விக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அதிக கட்டணம் வசூலிப்பது மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. 

             கட்டண நிர்ணயக் குழுவின் மூலம் தமிழக அரசு நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அதை அனைத்துப் பள்ளிகளும் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

போராட்டம்: 

             தமிழக அரசு அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக மாணவர் சங்கத்தின் சார்பில் வரும் 15-ம் தேதி காலை சென்னை சென்ட்ரலில் உள்ள மெம்மோரியல் ஹால் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.