தொடர் முழக்கப் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர் முழக்கப் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சமச்சீர் கல்வியை அமல் படுத்தக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர் முழக்கப் போராட்டம்



         சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் பாமக சார்பில் தொடர் முழக்கப் போராட்டம்,  நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்

         மதுக்கடைகளை தானே ஏற்று நடத்தும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களை ஏற்று நடத்த ஏன் தயக்கம் காட்டுகிறது. தமிழகத்தில் அதிகரித்துவிட்ட தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல் சமச்சீர் கல்வி பற்றி ஆராய தமிழக அரசு நியமித்துள்ள வல்லுநர் குழு ஒரு கண்துடைப்பு நாடகம் சமச்சீர் கல்வியை அமல்படுத்தச் செய்வதில் எந்தக் கட்சியும் தீவிரமாக செயல்படவில்லை என்றார்.

சமச்சீர் கல்வியை வலியுறுத்தி பாமக சார்பில் சூன் 20-ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

சென்னை:

          தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை வலியுறுத்தி பாமக சார்பில் வரும் 20-ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

             ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும்போது, அதை மற்ற வகுப்புகளுக்கும் நீடிப்பதற்கு தடை எதுவும் இருக்க முடியாது. கடந்த ஆண்டு 1 மற்றும் 6-ம் வகுப்பில் சமச்சீர் கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போதைய கல்வியாண்டில் வேறு பாடத்திட்டத்தில் படிக்க நேர்ந்தால் அவர்களுக்கு தேவையற்ற சிரமங்கள் ஏற்படும். எனவே, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 

           உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிகள் மூலமாக இக்கருத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி பாமக சார்பில் வரும் 20-ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை நினைவரங்கம் அருகே எனது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சூன் 17ல் கல்விக் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து தமிழக மாணவர் சங்கம் சார்பில் போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு


            கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் ஜூன் 17ஆம் தேதி நடைபெறுகிறது என்றும், இந்த போராட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும், தமிழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக மாணவர் சங்க செய்திக் குறிப்பில்,

             கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிரான தமிமிழக மாணவர் சங்கத்தின் போராட்டம் வரும் ஜூன் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 11 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள நினைவரங்கம் அருகில் இந்தப் போராட்டம் நடைபெறும்.
இப்போராட்டத்தில் தமிழக மாணவர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து தமிழக மாணவர் சங்கம் சார்பில் ஜூன் 15-ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ்

           அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதை தமிழக அரசு தடுக்கக் கோரி தமிழக மாணவர் சங்கம் சார்பில் ஜூன் 15-ம் தேதி சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

             தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை பாமக நடத்தியிருக்கிறது. இதனால் கல்விக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அதிக கட்டணம் வசூலிப்பது மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. 

             கட்டண நிர்ணயக் குழுவின் மூலம் தமிழக அரசு நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அதை அனைத்துப் பள்ளிகளும் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

போராட்டம்: 

             தமிழக அரசு அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக மாணவர் சங்கத்தின் சார்பில் வரும் 15-ம் தேதி காலை சென்னை சென்ட்ரலில் உள்ள மெம்மோரியல் ஹால் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

பொது மருத்துவ தேர்வுக்கு எதிராக போராட்டம் : ராமதாஸ்

திண்டுக்கல் : 

             திண்டுக்கல்லில் பேசிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மருத்துவ கல்விக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பொது நுழைவுத்தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் தமிழகத்தை நிர்பந்தம் செய்தால் அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் மாநில அளவில் பந்த் நடத்தி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பொது நுழைவுத்தேர்வை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

பாமக போராட்டத்தால் படாளம் சர்க்கரை ஆலை திறப்பு: ராமதாஸ்

மதுராந்தகம்:
 
                பாமக போராட்டத்தால்தான் படாளம் சர்க்கரை ஆலை திறக்கப்பட்டது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பாமக சார்பில் மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஆகிய 2 இடங்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
 
இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியது: 
 
                      படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க விவசாயிகளைத் திரட்டி 2 முறை போராட்டம் நடத்தியதன் பலனாக அரசு ஆலையை திறந்துள்ளது. பாமக ஆட்சிக்கு வந்தால் போடப்படும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்துவகற்காகத்தான் இருக்கும். சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வருவோம் என்றார்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தொடர் முழக்க போராட்டம்

சிதம்பரம்:

               சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

                   மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முத்து.குமார் வரவேற்றார், பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கி.தேவதாஸ் படையாண்டவர், கடலூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் இரா.சிலம்புச்செல்வி, நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பி.கே.அருள், பால்ஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். மாவட்டத் தலைவர் வ.அன்பழகன் நன்றி கூறினார்.

பா.ம.க. தொடர் முழக்கப் போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை:
 
              ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.க. சார்பில் செப்டம்பர் 18-ம் தேதி நடத்தவிருந்த தொடர் முழுக்கப் போராட்டம் செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 
 
                 சமூக நீதிக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த தடையாக உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இக் கோரிக்கையை பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்கவும், அதன் அடிப்படையில் தேவைப்பட்டால் இட ஒதுக்கீட்டின் அளவை புதிதாக முடிவு செய்து, சட்டம் இயற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
                  இட ஒதுக்கீட்டு சலுகை பெறும் தகுதியுடையவர்கள் எண்ணிக்கைக்கேற்ப இட ஒதுக்கீட்டு அளவை முடிவு செய்யும் அதிகாரம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். அந்த வகையில் இப்போதைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். நமது மாநிலத்தில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தி, இடஒதுக்கீட்டின் அளவை 69 சதவீதத்துக்கும் அதிகமாக முடிவு செய்து சட்டம் இயற்ற அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை தமிழக அரசு தவறவிடக் கூடாது. 
 
                  எனவே, தமிழகத்தில் உடனடியாக ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி பா.ம.க. சார்பில் செப்டம்பர் 18-ல் மாநிலம் முழுவதும் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் இப் போராட்டம் இம்மாதம் 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.