பவானி சட்டமன்ற தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பவானி சட்டமன்ற தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3 மாவட்டங்களில் பா.ம.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள்

சேலம்:

            தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மற்றும் சில கட்சிகள் உள்ளன.

             சேலம் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மேட்டூர், ஓமலூர், இடைப்பாடி தாரமங்கலம் ஆகிய தொகுதிகளில் ஏற்கனவே பா.ம.க. எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று உள்ளனர். இந்த தொகுதிகளை மீண்டும் பா.ம.க. கேட்டுப்பெற உள்ளது. தொகுதி சீரமைப்பில் தாரமங்கலம் தொகுதி நீக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த தொகுதிக்கு பதிலாக சங்ககிரி அல்லது சேலம் மேற்கு தொகுதியை பா.ம.க. கேட்டுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

              தர்மபுரி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தர்மபுரி தொகுதியில் பா.ம.க.வெற்றி பெற்று உள்ளது. பாலக்கோடு தொகுதியில் பா.ம.க. போட்டியிட்டு அ.தி.மு.க.விடம் தோல்வி அடைந்து உள்ளது. இதனால் அந்த 2 தொகுதிகளையும் மீண்டும் பா.ம.க. கேட்டுப்பெற உள்ளது. கடந்த முறை நடந்த பெண்ணாகரம் இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டு 47 ஆயிரம் ஓட்டுக்களை பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றது.

               இதனால் அந்த தொகுதியையும் அந்த கட்சி தி.மு.க.விடம் கேட்டுப் பெற உள்ளது. கடந்த தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் இடம்பெற்ற 17 பஞ்சாயத்து பகுதிகள் இந்த முறை தர்மபுரி சட்டசபை தொகுதியில் இடம்பெற்று உள்ளது. இதனால் தர்மபுரி தொகுதியில் மீண்டும் வெற்றி கிடைக்கும் என்று பா.ம.க. நம்புகிறது. மேலும் இந்த கட்சி புதிதாக உருவாக்கப்பட்ட பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கும் குறி வைத்து உள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த முறை காவேரிப்பட்டணம் தொகுதியில் பா.ம.க. வெற்றி பெற்றது.

                இதனால் தற்போது அந்த தொகுதி மறு சீரமைப்பில் நீக்கப்பட்டு உள்ளது. புதிதாக பர்கூர் தொகுதி உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் காவேரிப்பட்டணம் தொகுதியில் இருந்த பல பகுதிகள் தற்போது பர்கூர் தொகுதியில் உள்ளன. இதனால் பர்கூர் தொகுதியை பா.ம.க. கேட்டுப்பெறும் என்று உறுதியாக தெரிய வந்து உள்ளது. கடந்த 6 மாதங்களாகவே பா.ம.க. நிர்வாகிகள் அந்த தொகுதியில் வலம் வந்து பிரசாரப்பணிகளில் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஓசூர்,தொகுதியையும் கேட்டுப் பெற உள்ளதாக பா.ம.க. வினர் மத்தியில் பேச்சு உள்ளது.

              கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் ஓசூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த முறை அந்த தொகுதியை கேட்கலாம் என்ற முடிவுக்கு பா.ம.க. வந்து உள்ளது.   நாமக்கல் மாவட்டத்தில் கபிலர் மலை தொகுதியில் கடந்த தேர்தலில் பா.ம.க. வெற்றி பெற்றது. மீண்டும் அந்த தொகுதியை பா.ம.க. கேட்டுப்பெற உள்ளது.

பவானி சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை: டாக்டர் ராமதாஸ்

பவானி:

        பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், பவானி சட்டமன்ற தொகுதியின் கிளை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களுக்கான பயிற்சி முகாம் பவானி மீனாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

             பா.ம.க.வில் கிளைக்கழகத்தில் செயலாளர் பதவியில் இருப்பவர்கள் 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி பணியில் அவர்கள் வேகமாக செயல்படுவார்கள். இவர்கள் எழுத படிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். சில நடிகர்கள் கோட்டையை பிடிக்க துடிக்கிறார்கள். இவர்களை நோக்கி சென்றவர்களை நம்முடைய கட்சியில் சேர்க்க வேண்டியது ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்களிடம் உள்ளது. கட்சியில் சேரும் அவர்களுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும். இதற்காக கூடுதல் பொறுப்புகளை உருவாக்க வேண்டும்.
           
                  பா.ம.க. இருக்கும் கூட்டணி தான் வெற்றி கூட்டணி. பா.ம.க. இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணி அமைத்து போட்டியிடும் போது, பவானி சட்டமன்ற தொகுதியை கேட்டு பெறுவோம். இந்த தொகுதியில் கடந்த முறை பெற்ற ஓட்டுகளை விட அதிக ஓட்டுகள் பெற்று, இந்த தொகுதியை மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்காக கட்சியினர் இப்போது இருந்தே தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.
             

            பாட்டாளி மக்கள் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. யாருடன் கூட்டணி என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.