முல்லைப் பெரியாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முல்லைப் பெரியாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மதுரையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தென்மாவட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

           http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/a74a5887-26b6-41cf-b430-847a84b92385_S_secvpf.gif

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வடமாவட்டங்களை விட, தென்மாவட்டங்களை சேர்ந்த கட்சியினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என மதுரையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியது:

           உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வடமாவட்டங்களை விட, தென்மாவட்டங்களை சேர்ந்த கட்சியினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். 

          மதுரை மாநகராட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.  ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 926 கோடி ரூபாயில் 30 சதவீதம் மாநகராட்சியும் பங்களிப்பை செலுத்த வேண்டும். மாநகராட்சியில் பணம் இல்லாதால் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. மாநகராட்சி செலுத்த வேண்டிய 350 கோடி ரூபாயை அரசு வழங்க வேண்டும். ரயில்வே கட்டணத்தை உயர்த்த கூடாது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கேரளா புதிய அணை கட்ட தயாராகி வருகிறது.


          மண்டல் கமிஷன் பரிந்துரை செய்யப்பட்டு 21 ஆண்டுகள் ஆகியும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 27 சதவீதத்தில் 5.5 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க பார்லியில் தனி நிலைக்குழு அமைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். 



           தேர்தலுக்கு பின் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும். மாநிலத்தில் இலவச வேட்டி சேலை 3.5 கோடி பேருக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கைத்தறி, விசைத்தறிகளில் இருந்து 5 சதவீதம் மட்டுமே வாங்கப்பட்டு, மீதம் வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு வரும் திட்டத்தை கைவிடவேண்டும், என்றார்.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரளத்துடன் பேச்சு வார்த்தை கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

        முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசுடன் தமிழகம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

           முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கேரள அரசு திமிருடனும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்துள்ளது. இப்பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பது ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை தெரிந்து கொண்டுதான் பேச்சு நடத்த வருமாறு தமிழக அரசுக்கு கேரளம் அழைப்பு விடுத்துள்ளது.

          கேரள அரசின் இந்த வஞ்சக வலையில் தமிழக அரசு ஒருபோதும் விழுந்துவிடக் கூடாது. அவர்கள் அழைப்பை ஏற்று பேச்சு நடத்தினால், நாம் 125 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல நேரிடும். மேலும், தமிழகத்தின் 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை இழக்க நேரிடும். எனவே, புதிய அணை குறித்து பேச்சு நடத்துவதற்கான கேரள அரசின் அழைப்பை ஏற்கவே கூடாது. இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.