ரெயில்வே பட்ஜெட் 2011-12 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரெயில்வே பட்ஜெட் 2011-12 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரெயில்வே பட்ஜெட் தமிழகத்திற்கு ஏமாற்றம்: பாமக நிறுவனர் ராமதாஸ்

          மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட் தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கிறது என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 
               2011-12ஆம் ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்திருக்கிறார். பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதை தவிர்த்து இந்த பட்ஜெட்டில் புதுமை எதுவும் இல்லை.  ரெயில் பயணத்தை இனிமையானதாக்க எத்தகைய புதிய வசதிகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மிக விரைவில் நடைபெற இருக்கும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு மம்தா பானர்ஜி மத்திய ரெயில்வே பட்ஜெட்டை தயாரித்து அளித்துள்ளார்.

               ஒட்டுமொத்த இந்தியாவிற்கான பட்ஜெட் என்பதை விட மேற்குவங்கத் தேர்தலுக்கான மம்தா பானர்ஜி தயாரித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவிற்கு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள ஒரு சில புதிய திட்டங்கள், பெரும்பாலான புதிய ரெயில்கள் அனைத்தும் மேற்கு வங்கத்திற்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.  மொத்தம் 104 புதிய ரெயில்ரகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார். அதில் 12 தொடர்வண்டிகள் மட்டுமே தமிழ்நாட்டிற்குள்ளும், தமிழ்நாடு வழியாகவும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ஒரு ரெயில் தவிர மற்றவை நாள்தோறும் இயக்கப்படுபவை அல்ல. இவை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை இயக்கப்படும் என்ற அறிவிப்பு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

             ஏற்கனவே திருச்செந்தூருக்கும் - சென்னைக்கும் இடையே வாரம் ஒருமுறை இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என்ற தென் மாவட்டங்களின் கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தமளிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்திலும், இரவிலும் கூடுதல் இரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. மின்மயமாக்கும் திட்டம், இரட்டைப்பாதை திட்டம் ஆகியவற்றிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.

                  சென்னை பரங்கிமலையில் இருந்து மகாபலிபுரம் வழியாக புதுச்சேரிக்கு புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் பாமக அமைச்சரின் பெரு முயற்சியால் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் இப்போது கிடப்பில் போடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. மொத்தத்தில் இந்த ரெயில்வே பட்ஜெட் தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாகும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.