சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா மிக பிரமாண்டமாக நாளை நடத்தப்படுகிறது. சித்திரை முழுநிலவான புதன்கிழமை நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த விழாவிற்கு வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெ.குரு தலைமை தாங்குகிறார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகிக்கிறார்கள் .பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை யாற்றுகிறார். முன்னாள் மத்திய மந்திரி யும், பா.ம.க. இளைஞர் அணி தலை வருமான அன்புமணி ராமதாஸ் எழுச்சி உரை யாற்றுகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி துணை பொதுச் செய லாளரும், செங்கல்பட்டு எம்.எல்.ஏ.வுமான திருக்கச்சூர் கி.ஆறுமுகம், முன்னாள் அமைச்சர்கள் அரங்கவேலு, பொன்னுசாமி, என்.டி.சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் சக்தி கமலாம்பாள், மூர்த்தி, வேல்முருகன், செந்தமிழ்செல்வன், தமிழரசு, தி.க.ராசா, காவேரி நெடுஞ்செழியன், இளவழகன், கலிவரதன், முன்னாள் எம்.பி. தன்ராஜ், ஆர்.செந்தில் ஆகியோரும் பேசுகிறார்கள். பா.ம.க. மாநில பொதுச் செயலாளர் பாலசுந்தரி, மாநில பொருளாளர் மன்சூர், துணை பொதுச்செயலாளர் இசக்கிபடையாச்சி, சமூக முன்னேற்ற சங்க மாநில தலைவர் கோபால், மறைமலைநகர் நகராட்சி தலைவர் சசிகலா ஆறுமுகம், மா.ஏழுமலை, மாசிலாமணி, ஏகாம்பரம் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முழு பலன் கிடைக்காததால் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தி இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பது குறித்தும் இந்த மாநாட்டில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் மாநிலம் தழுவிய வன்னியர் இளைஞர் பெருவிழா அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநாட்டையொட்டி மாமல்லபுரத்தில் எங்கு பார்த்தாலும் பிரம்மாண்ட கட்-அவுட் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக