பாமகவின் வன்னியர் மாநாடு : இட ஒதுக்கீடு கோஷம்


                சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா மிக பிரமாண்டமாக நாளை நடத்தப்படுகிறது. சித்திரை முழுநிலவான நாளை  நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

              மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த விழாவிற்கு வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெ.குரு தலைமை தாங்குகிறார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகிக்கிறார்கள்.

              பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை யாற்றுகிறார். முன்னாள் மத்திய மந்திரியும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ்  உரையாற்றுகிறார் என்று பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முழு பலன் கிடைக்காததால் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தி இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.  இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பது குறித்தும் இந்த மாநாட்டில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: