வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு! - மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கும் பாமக

                வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.


              சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை நடக்கும் வன்னியர் இளைஞர் பெருவிழாவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகிறது. சித்திரை முழுநிலவான நாளை (புதன்கிழமை) நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சம் இளைஞர் கள் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.


                 4 மணிக்கு தொடங்கும் இந்த விழாவிற்கு வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெ.குரு தலைமை தாங்குகிறார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகிக்கிறார்கள். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை யாற்றுகிறார். முன்னாள் மத்திய மந்திரி யும், பா.ம.க. இளைஞர் அணி தலை வருமான அன்புமணி ராமதாஸ் பேசுகிறார்.


                          வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முழு பலன் கிடைக்காததால் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தி இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பது குறித்தும் இந்த மாநாட்டில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் மாநிலம் தழுவிய வன்னியர் இளைஞர் பெருவிழா அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: