வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், பா.ம.க., வுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது நல்ல எண்ணத்தோடு எடுத்த முடிவு,'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதி நேற்று அளித்த பேட்டி:
வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், பா.ம.க., விற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என தி.மு.க., எடுத்துள்ள முடிவு ராஜதந்திரமா? இந்த முடிவை பா.ம.க., ஏற்றுக் கொள்ளுமா? ராஜதந்திரமெல்லாம் கிடையாது. நல்ல எண்ணத்தோடு எடுத்த முடிவு.
மத்திய அரசின் கூட்டணியில் பா.ம.க., இப்போது இடம் பெறலாமா?
மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தவில்லை. இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் மத்திய அரசு எடுத்துள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் தங்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதா? திருப்தி இல்லை என்று சொல்ல முடியாது. போதுமான அளவுக்கு மனநிறைவு இல்லை.
2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், பா.ம.க., வுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என அறிவித்திருப் பது அக்கட்சியின் நம்பகத் தன்மையை சோதனை செய்வதற்கா?
உங்கள் கற்பனைக்கு நான் ஆளாக விரும்பவில்லை. தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வை சேர்ப்பதற்கு காங்கிரஸ் ஒப்புதல் அளித்து விட்டதா? ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிப்பேன்.ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை சீட் வழங்கப்படுகிறது? ஒரு சீட்டில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக