சட்டசபையில், காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஜி.கே.மணி நேற்று பேசியதாவது:
சந்தனக் கடத்தல் வீரப்பன் தவறு செய்தான்; அதனால், நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அவனுடைய சகோதரர் மாதையன் எந்தத் தவறும் செய்யவில்லை. அப்படியிருந்தும், அவர் கைது செய்யப்பட்டு, 20 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும்.போலீசாருக்கு, எட்டு மணி நேரம் வேலை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீபத்தில், புதிதாக போலீசாரை தேர்வு செய்வதற்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில், ஆண் போலீசாரின் உயரம் 168 அங்குலத்தில் இருந்து 170 அங்குலமாகவும், பெண் போலீசாருக்கு 157 அங்குலத்தில் இருந்து 159 அங்குலமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதை கைவிட வேண்டும்.முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். முதல்வரும், படிப்படியாக அந்நிலை உருவாக்கப்படும் என்றார். அதன்படி, முழு மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக