சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த முடிவு, 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
ஈரோட்டில் பேசிய பா.ம.க., நிறுவனர்ர் ராமதாஸ்,
ஈரோடு பழநி ரயில் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு உரியது. ஆனால், அத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் போது ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் நிவாரணம் அளிக்க வேண்டும். மேலும், வீடுகள் கட்டித் தர வேண்டும். இதற்காக, நில ஆர்ஜித கமிட்டி அமைத்து செயல்பட வேண்டும்.
இத்திட்டம் குறித்து மத்திய அரசிடம் விளக்கமாக எடுத்துக் கூற உள்ளோம். இத்திட்டத்திற்காக போராடுவதால், நான் அரசுக்கு எதிரானவன் என மாநில அரசு கூறி வருகிறது. பா.ம.க., என்றுமே மக்களுக்காக போராடும். வறுமையை ஒழிப்போம் என அரசு முடிவெடுத்து செயல்படுவதாகக் கூறி வருகிறது. ஆனால், மதுக்கடைகள் அதிகரித்துள்ளதால், வறுமை அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.
இதேபோல், பருத்தி ஏற்றுமதியில், ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். மாநில அரசு, இலவச மின் மோட்டார்களை இரண்டு லட்சம் பேருக்கு வழங்குவதாகக் கூறி செயல்படுத்தியது. இதில், முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த முடிவு, 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும். அதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் இருக்காது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக