சமூக நீதிக் கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூக நீதிக் கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திமுக தனித்து ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு: ராமதாஸ், திருமாவளவன் அறிவிப்பு

பாமக நிறுவனர் எஸ்.ராமதாûஸ அவரது சென்னை அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்து ஆசி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
சென்னை:

          தனித்து ஆட்சி அமைக்க திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். 

                 பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முதல் முறையாக ஒரே அணியில் தேர்தலில் போட்டியிடுகின்றன. கூட்டுப் பிரசாரம், தேர்தல் உத்திகள் குறித்து இருவரும் சென்னையில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.  

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் கூட்டாக கூறியது:  

             பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைந்து முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறோம். இன உணர்வு, தமிழ் பாதுகாப்பு தளங்களில் நாங்கள் தீவிரமாக இணைந்து பணியாற்றியுள்ளோம். தேர்தல் அரசியலில் இப்போதுதான் இணைந்துள்ளோம்.  எங்கள் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பாமகவும், விடுதலைச் சிறுத்தை2களும் இணைந்து விடக்கூடாது என்று எண்ணியவர்களின் கனவு தகர்ந்து விட்டது. நாங்கள் இணைந்துள்ள திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். கருணாநிதி 6-வது முறையாக தமிழகத்தின் முதல்வராகப் போவது உறுதி.  

             ஒடுக்கப்பட்ட வன்னியர்களும், தலித்துகளும் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காக கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். எங்களின் 20 ஆண்டுகால கனவு இப்போது நனவாகியுள்ளது. நாங்கள் ஒரே அணியில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பது உழைக்கும் மக்களின் விருப்பமாக இருந்தது. அது இப்போது சாத்தியமாகியுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவரான முதல்வர் கருணாநிதியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சமூக நல்லிணக்க கூட்டணியாக உள்ளது. பாமக போட்டியிடும் 30 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் வலுவாக உள்ளது. 

              விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 10 தொகுதிகளில் பாமக வலுவாக உள்ளது.  வரும் தேர்தலில் கூட்டணி வலுப்பெற எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்து நல்லிணக்கத்தை உருவாக்குவோம்.  திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் வெற்றிக்காகவும் நாங்கள் கடுமையாக உழைப்போம். தேர்தலில் இணைந்து பிரசாரம் செய்வோம்.  வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டால் திமுக தனித்து ஆட்சி அமைக்க நாங்கள் 5 ஆண்டுகளும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம். 

                2ஜி அலைக்கற்றை முறைகேடு தேர்தலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்து மகிழ்ச்சியான செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றனர்.

பா.ம.க.வில் பலருக்கு உயர் பதவிகள் வருங்காலத்தில் கிடைக்கும்: பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாஸ் பேச்சு

தைலாபுரம்:

           திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.வின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்து பேசியது:

           "தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 31 தொகுதிகள் கிடைத்துள்ளது. பா.ம.க.வினர் அனைவருக்கும் உள்ள நிலை 31 தான் கிடைத்துள்ளதா! கடந்த முறை கிடைத்தது தான் இப்போதும் கிடைத்து உள்ளதா என எண்ணுகிறீர்கள். உங்கள் உள்ள எண்ணங்களையும், என்னுடைய உள்ளத்தின் எண்ணங்களையும் நீங்கள் அறிவீர்கள். உள்ளேபோனபோது மகிழ்ச்சியோடு சென்றேன். திரும்பி வரும்போது மகிழ்ச்சியோடுதான் வந்தேன் என இங்கு பேசியவர்கள் கூறினார்கள். ஆனால் இன்னும் ஒன்று சேர்த்து கிடைத்து இருந்தால் மிக மகிழ்ச்சியோடு திரும்பி வந்து இருப்பேன்.

              கூட்டணியில் சேர்ந்து விட்டோம். இனி நம்முடைய இலக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிகளை பெறும். பா.ம.க.வின் ஒவ்வொரு தொண்டனும் வெற்றிக்கு பாடுபட வேண்டும். 1991, 1996-ல் சமூக நீதி கூட்டணியை அமைத்தோம். அன்று முதல் இன்று வரை சமூக நீதிக்காக பாடுபட்டு வருகிறோம். பா.ம.க. வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற பாடுபட வேண்டும்.

               மேலும் கூட்டணிவேட்பாளர்களின் தொகுதியில் 3 மடங்கு பணி செய்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி 6-வது முறையாக முதல்வராக நம்முடைய வியர்வை துளிகளை எவ்வளவு வேண்டுமானாலும் சிந்த தயாராக இருக்க வேண்டும். டெல்லி மேலவை தேர்தலில் ஏமாற்றமும், மன உளைச்சலில் இருந்தபோது, தி.மு.க. நிர்வாக குழுவில் தீர்மானம் போட்டு கூட்டணியில் இருந்து வெளியேற்றியது. உயர்மட்டக்குழுவை கூட்டி திரும்பவும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டது.

               எப்போதும் தமிழக அரசையும், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் நான் எந்தவித விமர்சனமும் செய்ய வில்லை. தமிழகத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பா.ம.க. ஒன்றும் சொல்லவில்லையே என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். கடந்த ஓராண்டாக இந்த கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டது. உடன்படிக்கையும் ஏற்பட்டது.

                அரியலூர் மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு கருணாநிதி தன்னிடம் அண்ணா கூறியதாக கூறினார். வீட்டில் 10 மற்றும் 15 பட்டுபுடவைகள் இருந்தாலும் விருந்துக்கு செல்லும்போது, ஒரு பட்டுப்புடவைதான் கட்ட முடியும். அடுத்த விழாவிற்கு செல்லும்போதுதான் அடுத்த பட்டுப்புடவையை கட்ட முடியும் என்றார்.  ஒரே ஒரு பட்டுப்புடவை வைத்து இருப்பவர்கள் என்ன செய்வது என்றாலும் தி.மு.க. கூட்டணிக்காகவும், அனைத்து கட்சிக்காகவும் கடந்த முறை கிடைத்த 31 என்பதை பெற்றுக்கொண்டேன். தமிழகத்தில் மேலவை நம்மால்தான் வந்தது. இதை கூட்டணி பற்றி பேசியபோது தெரிவித்தேன். அவரும் உடன் இருந்த அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் ஆமாம் என்றனர்.

              பா.ம.க.வில் பலருக்கு உயர் பதவிகள் வருங்காலத்தில் கிடைக்கும். யாரும் வருத்தம் அடைய வேண்டாம். பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு பதவிகள் தேடி வரும். தேர்தலுக்கு 35 நாட்கள்தான் உள்ளது. பென்னாகரம் தேர்தலில் அறிமுகப்படுத்திய மைக்ரோ பிளானிங் திட்டம்தான் இந்த தேர்தலில் செயல்படுத்தபோகிறோம்.  தேர்தலில் களப்பணியாளர்களின் பணி முக்கியமானது.  களப்பணியாளர்களிடம் 100 பேர் வாக்காளர் பட்டியல் உள்ளதா என்பதை ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் உள்பட 52 பொறுப்பாளர்களும் கவனித்து அக்கறையுடன் பணியாற்ற வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

ஜனவரியில் கூட்டணி குறித்த முடிவு: ராமதாஸ்

                சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த முடிவு, 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

ஈரோட்டில் பேசிய பா.ம.க., நிறுவனர்ர் ராமதாஸ், 

             ஈரோடு பழநி ரயில் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு உரியது. ஆனால், அத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் போது ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் நிவாரணம் அளிக்க வேண்டும். மேலும், வீடுகள் கட்டித் தர வேண்டும். இதற்காக, நில ஆர்ஜித கமிட்டி அமைத்து செயல்பட வேண்டும்.

            இத்திட்டம் குறித்து மத்திய அரசிடம் விளக்கமாக எடுத்துக் கூற உள்ளோம். இத்திட்டத்திற்காக போராடுவதால், நான் அரசுக்கு எதிரானவன் என மாநில அரசு கூறி வருகிறது. பா.ம.க., என்றுமே மக்களுக்காக போராடும். வறுமையை ஒழிப்போம் என அரசு முடிவெடுத்து செயல்படுவதாகக் கூறி வருகிறது. ஆனால், மதுக்கடைகள் அதிகரித்துள்ளதால், வறுமை அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.

               இதேபோல், பருத்தி ஏற்றுமதியில், ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். மாநில அரசு, இலவச மின் மோட்டார்களை இரண்டு லட்சம் பேருக்கு வழங்குவதாகக் கூறி செயல்படுத்தியது. இதில், முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த முடிவு, 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும். அதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் இருக்காது என்றார்.

பா.ம.க. தலைமையில் சமூக நீதிக் கூட்டணி: ராமதாஸ்

தேனி:
 
          தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பா.ம.க. தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் என்று கட்சியின் நிறுவனர்  ராமதாஸ் கூறினார்.   
 
தேனியில் திங்கள்கிழமை நிறுவனர்  ராமதாஸ் கூறியது:   
 
           இந்தியாவில் வேளாண்மை உற்பத்தி மற்றும் பரப்பளவு குறைந்து வருகிறது. 1990-ம் ஆண்டு நாட்டின் விவசாய உற்பத்தி 30 சதவீதமாக இருந்தது. தற்போது 18 சதவீதமாகக் குறைந்துள்ளது. 5 ஆண்டுகளில் உணவுக்காக வெளிநாடுகளை எதிர்பார்க்கும் நிலையில் இந்தியா உள்ளது.  கிராமப்புறங்களில் விவசாய நிலங்களை வெளி மாநிலத்தவர் வாங்கி வீட்டு மனைகளாக மாற்றி வருகின்றனர். இதை முறைப்படுத்த உரிய சட்டம் கொண்டு வர வேண்டும்.    
 
              ஏழைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை முதல்வர் அறிவிக்க வேண்டும்.  முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். நதிநீர்ப் பிரச்னைகளை சம்பந்தப்பட்ட மாநில  முதல்வர்கள், பிரதமர் ஆகியோர் பேசித் தீர்க்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவின்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.   பா.ம.க. தலைமையில் 1991 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் சமூக நீதிக் கூட்டணி அமைக்கப்பட்டது. 
 
               தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலிலும் பா.ம.க. தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளது. பா.ம.க. தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களைக் கைப்பற்றும். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. கம்யூனிஸ்ட் தனியாக கூட்டணி அமைத்ததும் இல்லை.    தி.மு.க. அரசுக்கு மதிப்பீடு கொடுக்க நான் தயாராக இல்லை. தேர்தலில் மக்கள்தான் மதிóப்பீடு வழங்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு பா.ம.க. முழு ஆதரவு அளிக்கிறது என்றார் ராமதாஸ்.
 
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்