சென்னை:
விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மாவட்டந்தோறும் விவசாயக் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. எம்.எல்.ஏ. எதிரொலி மணியன் கோரினார்.
பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. எதிரொலி மணியன் பேசியது:
தமிழக அரசு தற்போது மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்தி வருகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டந்தோறும் விவசாயக் கல்லூரிகளை அமைக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு சட்டவிரோதச் செயல்களுக்கு மதுப்பழக்கம் முக்கியமான காரணமாக உள்ளது. எனவே, மது இல்லாத முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும். சட்டம்-ஒழுங்கு போலீசாரையே முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்கும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்காக தனிப்படையை உருவாக்க வேண்டும் என்றார்.
1 கருத்துகள்:
1987 ல் நடந்த சமூக நீதி புரட்சியில் 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கனோர் தமது உடைமைகளை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் ரத்தம் சிந்தினர். லட்சக்கணக்கானோர் சிறைக்கு சென்றனர். இதனால் 20௦% ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் 107 சாதிகள் தான் பெரும்பாலும் அனுபவிக்கிறது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, 4 காய்ந்து போன மரத்தை ரோட்டில் போட்டதை உலக மகா குற்றம் என சித்தரித்து பேசுகின்றனர், எழுதுகின்றனர். பதவி சுகம் பார்க்காமல் மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் பாமக பல ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும், ஊழியர்களும் பலன் பெற்றுள்ளனர். இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு ஒரு சாதிக்குத்தான் பலன் கிடைத்தது என சித்தரித்து எழுதுகின்றனர்
கருத்துரையிடுக