நெய்வேலி:
நெய்வேலி வட்டம் 21 மற்றும் 30 பகுதியில் உள்ள குடிசைவாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்டப் பேரவையில் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் புதன்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப் பேரவை இடைக்கால நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் பங்கேற்றுவரும் பண்ருட்டி எம்.எல்.ஏ. தி.வேல்முருகன், புதன்கிழமை பேரவையில் பேசியது:
என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிகின்ற 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் நெய்வேலி வட்டம் 21, 30-ல் உள்ள குடிசைப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் மின்சாரம் வழங்க மறுத்து வருவது வேதனைக்குரிய செய்தி. மேலும் அவர்கள் வசிக்கின்ற இடத்துக்கு அதிக தொகையில் தரை வாடகை கோருகிறார்கள். இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு மாவட்ட ஆட்சியர் மூலமாக என்.எல்.சி. நிர்வாகத்தை அழைத்துப் பேசி தீர்வு ஏற்படுத்திட வேண்டுகிறேன். மேலும் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் பணிபுரிகின்ற பேராசிரியர்கள் பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளனர்.
மாநில அரசின் கல்வித்துறை வழங்குகின்ற வழிகாட்டு நெறிமுறைகளை மதிக்க மறுக்கிறார்கள். என்.எல்.சி.யில் காலங்காலமாக பின்பற்றப்பட்ட பணி நேரம் என்பது தற்போது மாற்றியமைக்கப்பட்டு, காலை 9 முதல் மாலை 5,30 வரை பணிக்கு வரவேண்டும் என உத்தரவிடுகின்றனர். இதை எதிர்த்து கேட்டால் அடக்குமுறை நடைபெறுகிறது. இந்த நிலைகளை மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் என்.எல்.சி. சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த வெடிமருந்துகளால், சுரங்கப் பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள கிராமங்களான வானதிராயபுரம், தென்குத்து கிராமங்களில் உள்ள வீடுகள் குலுங்கின்றன. ஆடு, மாடுகள் விபத்துக்குள்ளாகின்றன. மேலும் கையகப்படுத்தும் வீடுகளுக்கு மாற்றிடம் தர மறுக்கிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்று போராட்ட நடவடிக்கையில் ஈடுபட நேரிடுகிறது.
ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் இதை பொருட்படுத்திக் கொள்வதில்லை. எனவே என்.எல்.சி. நிறுவனத்தினரை அழைத்து பேசி, இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என இத் தருணத்தில் கேட்டுகொள்வதாக வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.
1 கருத்துகள்:
தமிழ்நாட்டில் உள்ள 2.5 கோடி வன்னியர்களும் பாமகவுக்கு வாக்களித்தால் 100 தொகுதிகளில் பாமக மகத்தான வெற்றிபெறும். இது ஆணித்தரமான உண்மை. இதற்கு 2 5 கோடி வன்னியர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அனைவரும் பாமகவுக்கே ஓட்டு போடணும். எனவே 2 5 கோடி வன்னியர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக 3 வழிகள்.
1 . வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் அடர்த்தியாக உள்ள 15 மாவட்டங்களிலும் வன்னியர் கல்விக்கோவில் நிறுவி சேவை செய்யலாம். அல்லது தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு சொந்தமான அனைத்து கல்வி நிறுவனங்களையும் வன்னியர் அறக்கட்டளையுடன் இணைத்து சேவை செய்யலாம். அல்லது வன்னியர் அறக்கட்டளை மூலம் பட்ட படிப்பு பயிலும் அனைத்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள வன்னிய மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கலாம்.
2 . "வன்னியர் பூங்காவனம்" ஒன்றை அமைக்கலாம். இந்த பூங்காவனத்தில் பாமகவை பற்றிய அருங்காட்சியகம், வன்னியர் புராணம், வன்னியர்களின் பண்டைய மன்னர்கள் வரலாறு, பலவித மரங்கள் அடங்கிய பூஞ்சோலை, தோட்டக்கலை, விளையாட்டு சாதனங்கள் அமைத்து , இதை ஒரு உலக வன்னியர்களின் சுற்றுலா தலமாக அமைக்கலாம். அப்போதுதான் 2 5 கோடி வன்னியர்கள் பாமகவை பற்றியும், வன்னியர் வரலாறு பற்றியும் நன்கு அறிந்து கொள்வர். வன்னியர்களின் காணும் பொங்கல் இங்குதான் அமையணும். பறவைகளுக்கு ஒரு வேடந்தாங்கல். விலங்குகளுக்கு ஒரு முதுமலை. அதுபோல் வன்னியர்களுக்கு ஒரு "வன்னியர் பூங்காவனம்"
3 . மக்கள் தொலைக்காட்சியில் "வன்னியர்களின் அன்றைய நிலை, இன்றைய நிலை" என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளியிடலாம். அதில் பண்டைய ஆட்சிக்காலத்தில் யார் யார் வன்னியர் மன்னர்கள் (பல்லவன், சோழன், சம்புவராயர்) ஆட்சி செய்தனர். எப்படியெல்லாம் ஆண்ட பரம்பரையாக நாம் இருந்தோம். இன்று ஏன் இப்படி இருக்கிறோம்..வெறும் ஏழையாக மட்டுமே இன்று இருக்கிறோம். இதற்க்கு காரணம் என்ன. மற்ற கட்சிகள் எதுவும் வன்னியர்களுக்கு செய்யவில்லை. பாமக ஆட்சி வந்தால்தான் வன்னியர்கள் வளமாக வாழ முடியும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உருவாகும். இனி நாம் இந்த தமிழ் மண்ணை ஆள , பாமகவுக்கு மட்டுமே ஓட்டு அளிக்க அனைவரும் முன் வர உதவியாக இருக்கும். நாளைய ஆட்சி பாமக ஆட்சியாக இருக்கணும்.
கருத்துரையிடுக