சென்னை:
சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ம.க. இடம் பெறும் கூட்டணிதான் வெற்றி பெறும் என்று சட்டப் பேரவை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேசியது:
நுழைவுத் தேர்வு ரத்து, சென்னை துணை நகரத் திட்டம் கைவிடப்பட்டது, மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி, தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் குறைப்பு, கல்விக் கட்டணம் ரத்து, பணி மூப்பு அடிப்படையில் பணி நியமனம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, சமச்சீர் கல்வி, லாட்டரி சீட்டு ஒழிப்பு போன்ற பா.ம.க. வலியுறுத்திய பல்வேறு கோரிக்கைகள் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்ட மேலவை கொண்டு வருவதற்கான தீர்மானம் நிறைவேற மனமுவந்து பா.ம.க. வாக்களித்தது. இலங்கைப் பிரச்னை குறித்து நான் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தல், தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்த்தல், 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பதிலாக 100 சதவீத இட ஒதுக்கீடு சட்ட திருத்தம், தனியார் துறையில் இட ஒதுக்கீடு, மாநிலங்களே இட ஒதுக்கீடு கொள்கையை வகுத்துக் கொள்ள அனுமதி, உயர் நீதிமன்றத்தில் தமிழ், மது ஒழிப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் ஓரளவு நிறைவேற்றப்பட்டும், முழு அளவில் நிறைவேற்றப்படாமலும் உள்ளது.
இக்கோரிக்கைகள் நிறைவேற பா.ம.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்.சென்னை உயர் நீதிமன்றத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே நீதிபதியாக இருக்கிறார். 7 நீதிபதி பணியிடங்களுக்கு இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள பட்டியலில் ஒருவர்கூட வன்னியர் இல்லை. எனவே, இப்பட்டியலை திரும்பப் பெற்று வன்னியரை சேர்த்து புதிய பரிந்துரை பட்டியலை அனுப்ப வேண்டும். விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவர பதுக்கல், ஆன்-லைன் வர்த்தகத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும். நலிவடைந்துள்ள விவசாயம், நெசவுத் தொழிலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்.
மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன வசதியை மேம்படுத்தும் வகையில் நதிகள் இணைப்புக்கு அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் பரிசீலினையில் உள்ள தேசிய நீர்வழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற ரூ.5.60 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனை நிறைவேற்ற அந்தந்தப் பகுதி மக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.நாட்டுப்பற்றை உருவாக்கும் வகையில் ஒன்றிய அளவில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இளைஞர் சுய உதவிக் குழுக்களை உருவாக்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ம.க. பெரும் சோதனையை சந்தித்தது. ஆனால், பென்னாகரம் இடைத் தேர்தலில் இரு பெரும் சக்திகளை எதிர்த்து பாமக 2-வது இடத்தைப் பிடித்தது. பா.ம.க. தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பேரவைத் தேர்தலில் பா.ம.க. இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி பெறும் என்றார் ஜி.கே.மணி.
1 கருத்துகள்:
தமிழ்நாட்டில் உள்ள 2.5 கோடி வன்னியர்களும் பாமகவுக்கு வாக்களித்தால் 100 தொகுதிகளில் பாமக மகத்தான வெற்றிபெறும். இது ஆணித்தரமான உண்மை. இதற்கு 2 5 கோடி வன்னியர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அனைவரும் பாமகவுக்கே ஓட்டு போடணும். எனவே 2 5 கோடி வன்னியர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக 3 வழிகள்.
1 . வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் அடர்த்தியாக உள்ள 15 மாவட்டங்களிலும் வன்னியர் கல்விக்கோவில் நிறுவி சேவை செய்யலாம். அல்லது தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு சொந்தமான அனைத்து கல்வி நிறுவனங்களையும் வன்னியர் அறக்கட்டளையுடன் இணைத்து சேவை செய்யலாம். அல்லது வன்னியர் அறக்கட்டளை மூலம் பட்ட படிப்பு பயிலும் அனைத்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள வன்னிய மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கலாம்.
2 . "வன்னியர் பூங்காவனம்" ஒன்றை அமைக்கலாம். இந்த பூங்காவனத்தில் பாமகவை பற்றிய அருங்காட்சியகம், வன்னியர் புராணம், வன்னியர்களின் பண்டைய மன்னர்கள் வரலாறு, பலவித மரங்கள் அடங்கிய பூஞ்சோலை, தோட்டக்கலை, விளையாட்டு சாதனங்கள் அமைத்து , இதை ஒரு உலக வன்னியர்களின் சுற்றுலா தலமாக அமைக்கலாம். அப்போதுதான் 2 5 கோடி வன்னியர்கள் பாமகவை பற்றியும், வன்னியர் வரலாறு பற்றியும் நன்கு அறிந்து கொள்வர். வன்னியர்களின் காணும் பொங்கல் இங்குதான் அமையணும். பறவைகளுக்கு ஒரு வேடந்தாங்கல். விலங்குகளுக்கு ஒரு முதுமலை. அதுபோல் வன்னியர்களுக்கு ஒரு "வன்னியர் பூங்காவனம்"
3 . மக்கள் தொலைக்காட்சியில் "வன்னியர்களின் அன்றைய நிலை, இன்றைய நிலை" என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளியிடலாம். அதில் பண்டைய ஆட்சிக்காலத்தில் யார் யார் வன்னியர் மன்னர்கள் (பல்லவன், சோழன், சம்புவராயர்) ஆட்சி செய்தனர். எப்படியெல்லாம் ஆண்ட பரம்பரையாக நாம் இருந்தோம். இன்று ஏன் இப்படி இருக்கிறோம்..வெறும் ஏழையாக மட்டுமே இன்று இருக்கிறோம். இதற்க்கு காரணம் என்ன. மற்ற கட்சிகள் எதுவும் வன்னியர்களுக்கு செய்யவில்லை. பாமக ஆட்சி வந்தால்தான் வன்னியர்கள் வளமாக வாழ முடியும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உருவாகும். இனி நாம் இந்த தமிழ் மண்ணை ஆள , பாமகவுக்கு மட்டுமே ஓட்டு அளிக்க அனைவரும் முன் வர உதவியாக இருக்கும். நாளைய ஆட்சி பாமக ஆட்சியாக இருக்கணும்.
கருத்துரையிடுக