தைலாபுரம்:
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நேற்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் நடைபெற்றது.

இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். கட்சித்தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கான பணித் திட்டங்கள் குறித்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தோழமைக் கட்சிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுடன் இணக்கமாக செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த பொதுக்குழு கூட்டத்தில், முதல் அமைச்சராக கலைஞர் 6வது முறையாக பதவி ஏற்க பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என முடிவு செய்யப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக