தைலாபுரம்:
பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் என, பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் நடைபெறுகிறது. இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். கட்சித்தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்குகிறார். பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றுகிறார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியை பெறுவதற்கு அயராமல் உழைப்பதற்கான பணித் திட்டங்கள் குறித்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். தேர்தல் பிரச்சாரத்தின் போது தோழமைக் கட்சிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுடன் இணக்கமாக செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. இவ்வாறு ஜி.கே.மணி அறிக்கையில் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக