பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு நாளை வரை நீட்டிப்பு

சென்னை:
 
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பது:-
 
         பா.ம.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தைலாபுரம் தோட்டத்தில் 7-ந் தேதி வரை விருப்ப மனு கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான கால அவகாசம் 9-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போட்டியிட விரும்புபவர்கள் இந்த காலக் கெடுவுக்குள் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: