திமுக கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயம் : பாமக தலைவர் ஜி.கே.மணி

           திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறாவிட்டாலும், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

            தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து, அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி, வேலு, ஏ.கே.மூர்த்தி, வேல்முருகன், தமிழரசன் ஆகியோர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் முதல்வர் கருணாநிதியையும் பாமக குழுவினர் சந்தித்துப் பேசினர்.

இச்சந்திப்பு முடிந்ததும் செ பேசிய ஜி.கே.மணி,
               நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளோம். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. திமுக அரசு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்று திமுக மனதார விரும்பியது. ஆனால், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இடம் பெறாதது பாதிப்பை ஏற்படுத்தாது.

             திமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி, கிலோ அரிசி ஒரு ரூபாய் என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆகவே திமுக கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயம் என்றார்

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

உண்மையான தலைவர் யார்?. பதவி சுகம் பார்க்ககூடாது. ஊழல் செய்யகூடாது. மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் அரசிடம் போராட வேண்டும். மக்களுக்கு நல்ல கருத்துக்களை பரப்பும் சீர்திருத்தவாதியாக இருக்கணும். தமிழ், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் வளர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களுக்காக மக்களோடு வாழனும். சமூக நீதிக்காக பாடுபட வேண்டும். உலக தமிழர்களின் பிரச்சினைக்காக குரல் கொடுக்க வேண்டும். மக்களை ஆக்கபூர்வ வழியில் செல்ல, ஒரு ஆசானாக இருக்க வேண்டும். சினிமா மோகத்தில் உள்ள இளைஞர்களை நல்வழி படுத்த கருத்துரைக்க வேண்டும். மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த மகாத்மாவாக இருக்கனும்.
மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ள கட்சியினருக்கு எம்.எல்.ஏ, எம்.பி பதவி தரும் கிங் மேக்கராக இருக்கணும். நிழல் பட்ஜெட் தரும் வேந்தராக இருக்க வேண்டும். முன்னோடி திட்டங்களில் திறமையை காட்டுபவராக இருக்க வேண்டும். இவை அனைத்திற்கும் தகுதி படைத்த ஒரே தலைவர் டாக்டர் அய்யாதான்.

தமிழகத்தில் 2.5 கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்கள் 100 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறார்கள். மேலும் 50 தொகுதிகளில் கணிசமாக உள்ளனர். ஆண்ட பரம்பரையான நாம் ஆள வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் வரவேண்டும். இவர்கள் அனைவரும் பாமகவுக்கே ஓட்டு போட்டால் 100 தொகுதிகளில் படுத்துக்கொண்டே பாமக ஜெயித்து ஆட்சியை பிடிக்கும். 2.5 கோடி வன்னியர்களையும் பாமக என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். இதற்கு 2 எளிய வழிகள். 1 . ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் வன்னியர் சங்கத்தின் சார்பில் இலவச திருமண தகவல் மையம் ஏற்படுத்தி சேவை செய்யலாம். 2 . போலி சாதி சான்றிதழ் ஒழிப்பதன் முன்னோட்டமாக , தமிழகத்தில் உள்ள அனைத்து வன்னியர்களும் வன்னியர் சங்க அடையாள அட்டை வைத்திருக்கனும்.