மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் எதிர்ப்பை எதிர்த்து பா.ம.க. மேல் முறையீடு செய்யும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"எம்.பி.பி.எஸ், மற்றும் எம்.எஸ், எம்.டி முதலான மருத்துவ மேல்பட்டப்படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வினை (நுழைவுத் தேர்வு) நடத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கோடிக்கணக்கான கிராமப்புற மாணவர்களின் மருத்துவர்கள் ஆகும் கனவை தகர்த்து விடும்.
இதனை மத்திய அரசும், மாநில அரசும் எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்கக்கூடாது. உடனடியாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்விற்கு எடுத்துச் சென்று தடையாணை பெற வேண்டும். எப்பாடு பட்டேனும் வரும் கல்வியாண்டில் இதனை நடைமுறைப்படுத்த அனுமதிக்கவே கூடாது. மருத்துவம், பொறியியல் மற்றும் இதர உயர்நிலை கல்விகளில் மாணவர்களை எந்த முறையில் சேர்ப்பது என்பது மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய கொள்கை முடிவாகும்.
சமூக நீதிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் ஆணையை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவருக்கும் இருக்கிறது. இந்த கடமையை உணர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் குவிய வேண்டும். மேல்முறையீடு செய்வதற்கான முயற்சியை பா.ம.க. உடனடியாக தொடங்கும். மாநில அரசும், மத்திய அரசும் இத்தகைய முயற்சியை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த பொது நுழைவுத்தேர்வு என்பது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக கடந்த 4 கல்வியாண்டுகளில் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் கல்விகளில் அதுவரையில் நுழைய வழியின்றி தவித்த கிராமப்புற மாணவர்கள் நுழைவுத்தேர்வு என்ற தடைக்கல் நீக்கப்பட்டதற்கு பிறகு பெருமளவில் சேர்ந்து பயன் பெற்று வருகிறார்கள். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம், சமச்சீரான கல்வி மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை கட்டுமான வசதிகள் இல்லாத சூழ்நிலையில் நாடு முழுவதும் பொதுவான நுழைவுத்தேர்வு என்பது எப்படி சாத்தியமாகும்?’’என்று கூறியுள்ளார்.
2 கருத்துகள்:
உண்மையான தலைவர் யார்?. பதவி சுகம் பார்க்ககூடாது. ஊழல் செய்யகூடாது. மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் அரசிடம் போராட வேண்டும். மக்களுக்கு நல்ல கருத்துக்களை பரப்பும் சீர்திருத்தவாதியாக இருக்கணும். தமிழ், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் வளர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களுக்காக மக்களோடு வாழனும். சமூக நீதிக்காக பாடுபட வேண்டும். உலக தமிழர்களின் பிரச்சினைக்காக குரல் கொடுக்க வேண்டும். மக்களை ஆக்கபூர்வ வழியில் செல்ல, ஒரு ஆசானாக இருக்க வேண்டும். சினிமா மோகத்தில் உள்ள இளைஞர்களை நல்வழி படுத்த கருத்துரைக்க வேண்டும். மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த மகாத்மாவாக இருக்கனும்.
மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ள கட்சியினருக்கு எம்.எல்.ஏ, எம்.பி பதவி தரும் கிங் மேக்கராக இருக்கணும். நிழல் பட்ஜெட் தரும் வேந்தராக இருக்க வேண்டும். முன்னோடி திட்டங்களில் திறமையை காட்டுபவராக இருக்க வேண்டும். இவை அனைத்திற்கும் தகுதி படைத்த ஒரே தலைவர் டாக்டர் அய்யாதான்.
தமிழகத்தில் 2.5 கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்கள் 100 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறார்கள். மேலும் 50 தொகுதிகளில் கணிசமாக உள்ளனர். ஆண்ட பரம்பரையான நாம் ஆள வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் வரவேண்டும். இவர்கள் அனைவரும் பாமகவுக்கே ஓட்டு போட்டால் 100 தொகுதிகளில் படுத்துக்கொண்டே பாமக ஜெயித்து ஆட்சியை பிடிக்கும். 2.5 கோடி வன்னியர்களையும் பாமக என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். இதற்கு 2 எளிய வழிகள். 1 . ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் வன்னியர் சங்கத்தின் சார்பில் இலவச திருமண தகவல் மையம் ஏற்படுத்தி சேவை செய்யலாம். 2 . போலி சாதி சான்றிதழ் ஒழிப்பதன் முன்னோட்டமாக , தமிழகத்தில் உள்ள அனைத்து வன்னியர்களும் வன்னியர் சங்க அடையாள அட்டை வைத்திருக்கனும்.
கருத்துரையிடுக