திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் சங்கர் ஓட்டு சேகரிப்பு

திண்டிவனம்:


           திண்டிவனம் (தனி) தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் சங்கர் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு பெற்றார்.  திண்டிவனம் தனித் தொகுதி திமுக கூட்டணியில் பாமகவுக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது. பாமகவில் மாவட்டத் தலைவராக உள்ள சங்கருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.  

                இந்நிலையில் திண்டிவனம் நகருக்கு வந்த சங்கர், பாமக மாவட்டச் செயலர் ஏழுமலை, நகரச் செயலர் மலர்சேகர் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதனைத் தொடர்ந்து திமுக நகரச் செயலர் வெண்ணிலாகபிலனை சந்தித்த வேட்பாளர் சங்கர், தனக்கு  ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்யுமாறுக் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலர் ரமேஷ்நாதன் மற்றும் அனைத்துக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் பெற துவங்கியுள்ளார். 

                   சந்திப்பின் போது பாமக நகர மன்ற உறுப்பினர்கள், மரக்காணம் ஒன்றியச் செயலர் நடராஜ், கிளியனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் பூதேரிராஜேஷ் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்: