உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுகிறது. பா.ம.க. சார்பில் மாநகராட்சி மேயர் பதவி, நகராட்சி தலைவர் பதவி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
அக்டோபர் மாதம் 17, 19 ந் தேதிகளில் நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
சென்னை ஏ.கே.மூர்த்தி (முன்னாள் மத்திய அமைச்சர் ),
சேலம் - இரா.அருள் (பசுமை தாயகம்)
திருப்பூர் - சி.வடிவேல் கவுண்டர் ( மாநில இணை பொதுச் செயலாளர்)
மதுரை - ஆர்.கே.ரமேஷ் என்கிற ராமச்சந்திரன்,
ஈரோடு - பெ.அருள்மொழி,
தூத்துக்குடி - குரு சோபனா.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக