திருத்தணி :
நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், நகரம் முழுவதும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகின்றனர்.
திருத்தணி நகராட்சியில் தலைவர் மற்றும் 21 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு, அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு, பா.ம.க., சார்பில் முன்னாள் நகரச் செயலர் மணி, தி.மு.க., சார்பில் நகரச் செயலர் சந்திரன், அ.தி.மு.க. சார்பில் நகரச் செயலர் சவுந்தர்ராஜன், தே.மு.தி.க., சார்பில் மாவட்ட அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் போட்டியிடு வார்கள் என, கட்சி தலைமை கழகம் அறிவித்தது.
இதையடுத்து பா.ம.க., வேட்பாளர் ம் மணி நகராட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிகின்றார் பா.ம.க., சார்பில் போட்டியிடும் முன்னாள் நகரச் செயலர் மணி முதல் முறையாக நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.