தேவதாஸ் படையாச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவதாஸ் படையாச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புவனகிரி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வனை ஆதரித்து தொல்.திருமாவளவன் பிரச்சாரம்

புவனகிரி:

              தி.மு.க. கூட்டணியில் புவனகிரி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளராக அறிவுச்செல்வன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புவனகிரி அண்ணாசிலை அருகில் பிரசாரம் செய்து அறிவுச்செல்வனுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். 
 
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது:-

               கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 2 இயக்கங்களும் இப்படி இணையும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. ஒரு சமூக நல்லிணக்கத்தோடு இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகளும் ஒரே அணியில் இடம் பிடிக்கும் இந்த அரிய வாய்ப்பை நனவாக்கி தந்தவர் நம் தமிழக முதல்வர்.

              சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் நல்ல தலைவர். அந்த நல்ல தலைவராக கருணாநிதி விளங்குகிறார். இந்த ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டும். இதில் எந்த மோதலும், சிக்கலும் வரக்கூடாது. குடிசைகளில் வாழ்பவர்களில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும்தான் அதிகம். கருணாநிதியின் கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டம் வெற்றிபெற வேண்டுமானால் மீண்டும் 6-வது முறையாக கருணாநிதி முதல்வராக வரவேண்டும்.கடந்த கால கசப்புகளை மறந்து, நிகழ் காலத்தில் நாம் கை கோர்த்து, எதிர்காலத்தில் அரசியல் அதிகாரத்தை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

                கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க. புவனகிரி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் மதியழகன், நகர செயலாளர் கந்தன், நிர்வாகிகள் அமுதராணி, ராமன், பன்னீர்செல்வம், முத்து, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் குமார், ஒன்றிய குழுத் தலைவர் தனலட்சுமி கலைவாணன், நிர்வாகிகள் பழனிசாமி, சவுந்திரபாண்டியன், பன்னீர் செல்வம், செல்வராஜ், சிவக்குமார், கிருஷ்ணன், பா.ம.க. நிர்வாகிகள் தேவதாஸ் படையாண்டவர், வேல்முருகன், முத்துகுமார், சரவணன், மனோகரன், ரவிச்சந்திரன், குருசேவ், காசிநாதன், சுரேஷ், மணிமாறன், கர்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் செல்லப்பன், கதிரவன், சுதாகர், செந்தில், மோகன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாமக புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் 4-வது முறையாக களம் இறங்குகிறது

சிதம்பரம்:

                   கடலூர் மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி திமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி 4-வது முறையாக களம் இறங்குகிறது.

             புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி வன்னியர் சமுதாய வாக்காளர்கள் அதிகம் உள்ளது தொகுதி. இத்தொகுதியில் வன்னியர் 45 சதவீதமும், ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் 35 சதவீதமும், வேளாளர், யாதவர், செட்டியார் உள்ளிட்ட இதர சமூகத்தினர் 20 சதவீதத்தினர் உள்ளனர். 1952 தேர்தலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி படையாச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1957 தேர்தலில் சாமிக்கண்ணு படையாச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

                இதையடுத்து வன்னியர் சங்கம் உருவாகி பாமக உதயமான பிறகு 1991-ம் ஆண்டு புவனகிரி தொகுதியில் முதன்முதலாக பாமக தனித்து போட்டியிட்டது. பு.தா.அருள்மொழி போட்டியிட்டு கனிசமான வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை பெற்றார். 1996-ம் ஆண்டு தேர்தலில் பாமகவும், திமுகவும் நேரடியாக போட்டியிட்டன. இதில் திமுக வேட்பாளர் ஏ.வி.அப்துல் நாசர் வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் பு.தா.இளங்கோவன் 2-ம் இடத்தை பெற்று தோல்வியுற்றார்.

             பின்னர் 2001 தேர்தலில் பாமக போட்டியிடவில்லை. 2006 தேர்தலில் அதிமுகவும், பாமகவும் நேரடியாக போட்டியிட்டன. இதில் அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் தேவதாஸ் படையாண்டவர் 2-ம் இடத்தை பெற்று தோல்வியுற்றார். இந்நிலையில் தற்போது 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக புவனகிரி தொகுதியில் 4-வது முறையாக களத்தில் இறங்குகிறது. 

                 புவனகிரி தொகுதியில் போட்டியிட மாநில பாமக செயலாளர் அறிவுச்செல்வன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர், மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரபுரதன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டலாம் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 4-வது முறையாக களம் இறங்கும் பாமக இந்த முறையாவது வெற்றி வாய்ப்பை பெறுவது   எதிர்த்து போட்டியிடும் கட்சி மற்றும் வேட்பாளரை பொறுத்துதான் உள்ளது.

                  ஆனால் புவனகிரி தொகுதியில் அதிமுக போட்டியிடவில்லை. புவனகிரி தொகுதி அதிமுக கூட்டணியில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் வாய்ப்புள்ளதால், பாமகவினர் இந்த முறை எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என சுறுசுறுப்புடன் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது..

சிதம்பரம் மற்றும் புவனகிரி தொகுதியில் பாமக போட்டியிட கோரிக்கை

கடலூர் மாவட்ட பாமக தொண்டர்களும், நிர்வாகிகளும் சிதம்பரம் மற்றும் புவனகிரி தொகுதியில் பாமக போட்டியிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


கவனிக்க : நண்பர் திரு. குறிஞ்சிசெல்வன்  கூறியது 

              கடலூர் மாவட்டம் புவனகிரி சேர்ந்தவன் எங்கள் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கி உள்ளார்கள் வேட்பாளராக அரியலூர் மாவட்டம் திரு.அறிவுசெல்வன் அவர்கள் தேர்வு செய்யபட்டுள்ளார் இதனால் கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் பெரும் அத்ரிப்தி அடைந்து உள்ளார்கள் மேலும் இந்த முறை யாரும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அறிவுசெல்வன் அவர்களுக்கு கட்சி பணியாற்ற யாரும் முன் வரமாட்டார்கள் என்று கூறபடுகிறது இதனால் நாம் புவனகிரி தொகுதி தோல்வி அடைவோம் எனெவே இதை தடுக்க எங்கள் மாவட்ட சேர்ந்த திரு பேராசரியர் திருநாவுகரசு அல்லது திரு தேவதாஸ் படையாச்சி அவர்களுக்கு தேர்வு செய்தல் நிச்சியம் வெற்றி கிடைக்கும் .9944348353