அறிவுச்செல்வன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவுச்செல்வன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பா.ம.க.சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு

திருச்சி:

          திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போடியிட புதன்கிழமை 13 பேர் விருப்ப மனு அளித்தனர்.

             உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் கட்சி அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்று கட்சியின் பாட்டாளி இளைஞர் சங்க மாநிலச் செயலர் த. அறிவுச்செல்வன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதைத்தொடர்ந்து, சிந்தாமணி அண்ணா சிலை அருகேயுள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை விருப்ப மனு வாங்கும் பணி தொடங்கியது.

           மாவட்ட ஊராட்சி உறுப்பினர், வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்து புதன்கிழமை 13 பேர் மனு அளித்தனர். வெள்ளிக்கிழமை ஏராளமானோர் விருப்ப மனு அளிக்க இருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர். இந்த விருப்ப மனு வாங்கும் பணி செப். 12-ம் தேதி வரை தொடரும் என்று அறிவுச்செல்வன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக இளைஞர் சங்கச் செயல் வீரர்கள் கூட்டம்

காஞ்சிபுரம்:

               தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு ஏற்பட்ட தோல்வி நிரந்தரமானதல்ல என்று பாமக மாநில இளைஞர் சங்கச் செயலர் அறிவுச்செல்வன் பேசினார்.

          காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக இளைஞர் சங்கச் செயல் வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாநில இளைஞர் சங்க துணைச் செயலர் பராதிதாசன் தலைமை தாங்கினார். 

மாநில இளைஞர் சங்கச் செயலர் த.அறிவுச்செல்வன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது:

             இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி வாக்களித்தனர். இந்த வாக்குகளால்தான் பாமகவுக்கு தோல்வி ஏற்பட்டது. இந்த தோல்வி நிரந்தரமானது கிடையாது.  கடந்த தேர்தல்களில் படு தோல்வியுற்ற ஆளுங்கட்சிகள்கூட மீண்டும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் பல இடங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 70 ஆயிரம் பேர் பாமகவுக்கு வாக்களித்துள்ளனர். 

             எனவே சட்டப் பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு ஏற்பட்ட தோல்வி நிரந்தரமானது கிடையாது என்றார். இக் கூட்டத்தில் பாமக மாநில துணைச் செயலர் பொன்.கங்காதரன், மாவட்டத் தலைவர் குமாரசாமி, மாவட்டச் செயலர் பரந்தூர் சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் த.அறிவுச்செல்வன் பெற்ற வாக்கு விபரம்

2011  சட்டமன்றத் தேர்தலில் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் த.அறிவுச்செல்வன் பெற்ற வாக்கு விபரம்

Tamil Nadu - Bhuvanagiri
Result Declared
Candidate PartyVotes
SELVIAll India Anna Dravida Munnetra Kazhagam87413
T.ARIVUSELVANPattali Makkal Katchi74296
K. MURUGAVELIndependent2511
A. MUTHUJharkhand Mukti Morcha1475
R.KAMALAKANNANLok Jan Shakti Party1189
N. SAMYBahujan Samaj Party1031
P. PANNEERSELVAMIndependent603
P.SOUNDARARAJANIndependent584
A. MANIIndependent349
G. THIRUVARASAMOORTHYJanata Dal (United)243
K. DHANARASUIndependent233
M. PALANIVELPuratchi Bharatham179
E. GANESANIndependent159





புவனகிரி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வன் பார்வையிட்டார்


புவனகிரி சட்டமன்ற தொகுதி  

வாக்கு எண்ணும் மையத்தை பா.ம.க. வேட்பாளர் பார்வையிட்டார்
 
சிதம்பரம்:

             கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு சிதம்பரம் கடலூர் புறவழிச் சாலையில் உள்ள சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

          வருகிற 13ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் தினமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புவனகிரி சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அறிவுச்செல்வன் நேற்று சி.முட்லூர் அரசு கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்றார். பின்னர் அவர், வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டார்.

               மேலும், வாக்குப் பதிவு எந்திரங்கள் உள்ள அறைக்கு வருபவர்களை படம் பிடிக்கும் வெப்காமிராவுடன் கூடிய லேப்டாப்பையும் பார்வையிட்டார். அப்போது கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலரும், புவனகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான கல்யாணம் அங்கு இருந்தார்.




புவனகிரி சட்டமன்றத் தொகுதி பா.ம.க., வேட்பாளர் அறிவுச்செல்வனை ஆதரித்து சேர்மன் சிலம்புச்செல்வி பிரச்சாரம்

சேத்தியாத்தோப்பு : 

          புவனகிரி தொகுதி பா.ம.க., வேட்பாளர் அறிவுச்செல்வனை ஆதரித்து மாவட்ட சேர்மன் சிலம்புச்செல்வி பிரசாரம் செய்தார்.

             கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி, எறும்பூர், நெல்லிக்கொல்லை, துறிஞ்சிக்கொல்லை, மணக்காடு, ஆனைவாரி, நல்லதண்ணீர் குளம் உள்ளிட்ட கிராமங்களில் சிலம்புச்செல்வி பிரசாரம் செய்தார். அவருடன் முன்னாள் மாவட்டச் செயலர் சின்னதுரை, தொகுதி பொறுப்பாளர் ராஜாசாமிநாதன், முன்னாள் ஒன்றிய செயலர் பரமசிவம் உள்ளிட்ட தி.மு.க., - வி.சி., கட்சியினர் பங்கேற்றனர்

புவனகிரி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வனை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம்



 
கடலூர்:
           கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வனை ஆதரித்து சேத்தியாத்தோப்பு பஸ் நிலையம் அருகில் நடிகை குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார். 
அப்போது நடிகை குஷ்பு கூறியது:-

            டாக்டர் கலைஞர், சோனியாகாந்தி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் வெற்றிக்கூட்டணியில் மாம்பழம் சின்னத்தில் அறிவுச்செல்வன் போட்டியிடுகிறார். வருகிற 13-ந் தேதி அவரை ஜெயிக்கவைக்கவேண்டும். 6-வது முறையாக வெற்றிக் கூட்டணியில் கலைஞர் போட்டியிடுகிறார். அவரை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும்.

              கடந்த வாரம் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையில் யுவராஜ்சிங், காம்பீர் ஆகியோர் எப்படி பக்கபலமாக இருந்து அணியை வெற்றி பெற செய்தார்களோ, அதேபோல் தேர்தலில் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் பக்கபலமாக இருக்கிறார்கள். இந்த அணி நிச்சயம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

            கலைஞர் மீண்டும் 6-வது முறையாக முதல்-அமைச்சர் ஆவார். அதற்கு இந்த தொகுதியில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் அறிவுச் செல்வனை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.     

புவனகிரி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வனை ஆதரித்து தொல்.திருமாவளவன் பிரச்சாரம்

புவனகிரி:

              தி.மு.க. கூட்டணியில் புவனகிரி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளராக அறிவுச்செல்வன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புவனகிரி அண்ணாசிலை அருகில் பிரசாரம் செய்து அறிவுச்செல்வனுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். 
 
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது:-

               கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 2 இயக்கங்களும் இப்படி இணையும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. ஒரு சமூக நல்லிணக்கத்தோடு இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகளும் ஒரே அணியில் இடம் பிடிக்கும் இந்த அரிய வாய்ப்பை நனவாக்கி தந்தவர் நம் தமிழக முதல்வர்.

              சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் நல்ல தலைவர். அந்த நல்ல தலைவராக கருணாநிதி விளங்குகிறார். இந்த ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டும். இதில் எந்த மோதலும், சிக்கலும் வரக்கூடாது. குடிசைகளில் வாழ்பவர்களில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும்தான் அதிகம். கருணாநிதியின் கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டம் வெற்றிபெற வேண்டுமானால் மீண்டும் 6-வது முறையாக கருணாநிதி முதல்வராக வரவேண்டும்.கடந்த கால கசப்புகளை மறந்து, நிகழ் காலத்தில் நாம் கை கோர்த்து, எதிர்காலத்தில் அரசியல் அதிகாரத்தை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

                கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க. புவனகிரி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் மதியழகன், நகர செயலாளர் கந்தன், நிர்வாகிகள் அமுதராணி, ராமன், பன்னீர்செல்வம், முத்து, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் குமார், ஒன்றிய குழுத் தலைவர் தனலட்சுமி கலைவாணன், நிர்வாகிகள் பழனிசாமி, சவுந்திரபாண்டியன், பன்னீர் செல்வம், செல்வராஜ், சிவக்குமார், கிருஷ்ணன், பா.ம.க. நிர்வாகிகள் தேவதாஸ் படையாண்டவர், வேல்முருகன், முத்துகுமார், சரவணன், மனோகரன், ரவிச்சந்திரன், குருசேவ், காசிநாதன், சுரேஷ், மணிமாறன், கர்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் செல்லப்பன், கதிரவன், சுதாகர், செந்தில், மோகன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புவனகிரி சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து வன்னியர் சங்கம் பிரசாரம்

சிதம்பரம்:

             புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் த.அறிவுச்செல்வனை ஆதரித்து வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தனர்.

               முன்னாள் மாநில நிர்வாகி இமயவரம்பன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் செந்தில்முருகன் ஆகியோர் தலைமையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் கீரப்பாளையம் ஒன்றியத்தில் சாக்காங்குடி, ஆயிப்பேட்டை, அள்ளூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் த.அறிவுச்செல்வனுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்குச் சேகரித்தனர்.

              இந்நிகழ்ச்சியில் திமுக தலைமைக்கழக பேச்சாளர் கீரை.வீரமணி, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தேவதாஸ் படையாண்டவர், வன்னியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜம்புலிங்கம் உள்ளிட்டோர் பஙகேற்றனர். இதேபோல் புவனகிரி, கீரப்பாளையம் பகுதிகளில் பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் குருதேவ், காசிநாதன், வேல்முருகன், சரவணன் உள்ளிட்டோர் பாமக வேட்பாளருக்கு வாக்குச் சேகரித்தனர்.

புவனகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிவுச் செல்வனை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம்

சிதம்பரம்,

           சேத்தியாத்தோப்பு பொதுக்கூட்ட மேடையில் புவனகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிவுச் செல்வனை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
கூறியது:-  

               வீரமும், விவேகமும் நிறைந்த இந்த தொகுதியில் உங்களது வெற்றி வேட்பாளர் அறிவுச்செல்வன் போட்டியிடுகிறார். அவர் சில தேர்தல் வாக்குறுதிகளை கூறி நிறைவேற்றுவதாக கூறி உள்ளார். நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை வேல் முருகனும், நானும் போராடி பெற்று தருவோம். போராட்டம் நடத்தி வருவதால் என்னை போராட்ட மன்னன் என்று நடிகர் கூறியுள்ளார். அவர் எதற்காக போராடினார். என்னையும், கருணாநிதி யையும் அறிக்கை மன்னன் என்றும் அவர் கூறியுள்ளார்.

                நாங்கள் அறிக்கை தான் விட முடியும். இந்த தொகுதி பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கோட்டை. சாதாரண கோட்டை அல்ல.எக்கு கோட்டை, இந்த கோட்டையில் ஓட்டை போட முடியாது.ஓட்டு தான் போட முடியும்.தேர்தல் அமைதியான முறையில் நடக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை. வீரம் செறிந்த இந்த தொகுதியில் நமது வேட்பாளரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் பெற்றி பெற செய்ய வேண்டும்.  இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

              கூட்டத்தில் வேல்முருகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சிலம்புச் செல்வி, ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி கலைவாணன், சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கங்கை அமரன், செல்லப்பன், சுதாகர்,மோகன், ஜெயசீலன், தமிழ்க்குமரன், பா.ம.க.சிட்டிபாபு, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்



புவனகிரி சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் த.அறிவுசெல்வன் வாடகை வீட்டுக்கு மாறினார்

சிதம்பரம்:

               புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் த.அறிவுசெல்வன் தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு சென்னிநத்தம் கிராமத்தில் புதன்கிழமை வாடகை வீட்டில் பால் காய்ச்சி குடியேறினார்.  

              புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் த.அறிவுச்செல்வன் அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தைச்  சேர்ந்தவர்.  பாமக மாநில இளைஞரணிச் செயலராக உள்ளார்.  இந்நிலையில் வேட்பாளர் வேறு தொகுதியைச் சேர்ந்தவர்.  வெற்றி பெற்றால் அவரை பார்க்க முடியாது என எதிர்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.  எனவே வெளியூர் வேட்பாளர் என்ற எதிர் கட்சியினரின் பிரசாரத்தை முறியடிக்க வேட்பாளர் த.அறிவுச்செல்வன் தொகுதிக்குட்பட்ட கிராமத்தில் புதன்கிழமை குடியேறினார்.  

               இந்நிகழ்ச்சியில், பாமக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர், முன்னாள் மாவட்டச் செயலர்கள் சிட்டிபாபு, சின்னதுரை, எஸ்.கே.ராஜேந்திரன், ஒன்றியச் செயலர் செல்வராஜ், மாவட்ட விவசாய அணி செயலர் சேரலாதன், கீரப்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் குடிசைத் தொழில்களை உருவாக்க நடவடிக்கை: பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வன்

சேத்தியாத்தோப்பு : 
 
              புவனகிரி தொகுதியில் குடிசைத் தொழில்களை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என பா.ம.க., வேட்பாளர் அறிவுச்செல்வன் கூறினார்.

இதுகுறித்து     புவனகிரி தொகுதி பா.ம.க., வேட்பாளர் அறிவுச்செல்வன் கூறியது:

              புவனகிரி தொகுதியில் மிகப்பெரிய ஏரியான வாலாஜா ஏரியை ஆழப்படுத்தவும், வெள்ளாற்று கரைகளை பலப்படுத்தவும் தடுப்பணை அமைக்கவும் பரவனாற்றை தூர் வாரி ஆழப்படுத்தவும், பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க பாடுபடுவேன். என்.எல்.சி., 3 வது மின் நிலைய விரிவாக்கத் திட்டம் மூலம் வெளியேற்றப்படும் நீரை விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமங்களிலும் இணைப்புச் சாலைகள் அமைத்தல், சேத்தியாதோப்பு பால் குளிரூட்டு நிலையத்தை நவீனபடுத்தப்படும். சேத்தியாத்தோப்பு, புவனகிரி பஸ் நிலையங்களை மேம்படுத்துவேன்.

                  தொகுதியில் குடிசைத் தொழில்களை மேம்படுத்தும் வகையில் மீன் பண்ணை, தேனீ வளர்ப்பு, பட்டு நெசவு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர முயற்சிப்பேன்.காகித ஆலை விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன். விவசாய கூட்டுறவு சங்க கிளைகளை அதிகரித்து தருவேன். புவனகிரியில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன்.அனைத்து கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பேன். மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்படும் கம்மாபுரம், புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களையும் பாதுகாத்திட நிரந்தர வெள்ளத்தடுப்பு அணை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில் விவசாயத்தை மேம்படுத்த பாடுபடுவேன்.

சேத்தியாதோப்பு பால் குளிரூட்டு நிலையத்தை நவீனபடுத்தப்படும்: பா.ம.க., வேட்பாளர் அறிவுச்செல்வன்

சேத்தியாத்தோப்பு : 

                புவனகிரி தொகுதியில் குடிசைத் தொழில்களை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என பா.ம.க., வேட்பாளர் அறிவுச்செல்வன் கூறினார்.

இதுகுறித்து பா.ம.க., வேட்பாளர் அறிவுச்செல்வன் கூறியது:

             புவனகிரி தொகுதியில் மிகப்பெரிய ஏரியான வாலாஜா ஏரியை ஆழப்படுத்தவும், வெள்ளாற்று கரைகளை பலப்படுத்தவும் தடுப்பணை அமைக்கவும் பரவனாற்றை தூர் வாரி ஆழப்படுத்தவும், பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க பாடுபடுவேன். என்.எல்.சி., 3 வது மின் நிலைய விரிவாக்கத் திட்டம் மூலம் வெளியேற்றப்படும் நீரை விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுப்பேன்.
 
               அனைத்து கிராமங்களிலும் இணைப்புச் சாலைகள் அமைத்தல், சேத்தியாதோப்பு பால் குளிரூட்டு நிலையத்தை நவீனபடுத்தப்படும். சேத்தியாத்தோப்பு, புவனகிரி பஸ் நிலையங்களை மேம்படுத்துவேன்.தொகுதியில் குடிசைத் தொழில்களை மேம்படுத்தும் வகையில் மீன் பண்ணை, தேனீ வளர்ப்பு, பட்டு நெசவு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர முயற்சிப்பேன். 

               காகித ஆலை விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவேன். விவசாய கூட்டுறவு சங்க கிளைகளை அதிகரித்து தருவேன். புவனகிரியில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பேன். மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்படும் கம்மாபுரம், புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களையும் பாதுகாத்திட நிரந்தர வெள்ளத்தடுப்பு அணை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில் விவசாயத்தை மேம்படுத்த பாடுபடுவேன்.

என்எல்சி நிறுவன நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை:புவனகிரி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் த.அறிவுச்செல்வன்

சிதம்பரம்:

              நெய்வேலி 3-வது அனல் மின்நிலைய விரிவாக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை முழுமையாக விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுப்பேன் என புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் த.அறிவுச்செல்வன் தெரிவித்தார்.  

இது குறித்து புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் த.அறிவுச்செல்வன்   தெரிவித்தது: 

                   என்னை உறுப்பினராக தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் தொகுதியின் அடிப்படை முக்கிய பிரச்னைகளை முன்னின்று செயல்படுத்துவேன்.  ÷இத்தொகுதியின் மிகப்பெரிய ஏரியாக கருதப்படும் வாலாஜா ஏரியை ஆழப்படுத்தி, தடுப்பணைகளை உயர்த்தி வீராணம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சேமித்து 11,400 ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண் நிலங்கள் பாசன பெற நடவடிக்கை மேற்கொள்வேன்.  

                 ஆண்டுதோறும் பரவனாற்றில் ஏற்படும் உடைப்பினால் எல்லைக்குடி, குமுடிமூலை உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பரவனாற்றை தூர்வாரி, ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்.  ÷சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பேன். விவசாயிகளின் விளைப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.  

                  சேத்தியாத்தோப்பை மையமாக கொண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க பாடுபடுவேன்.  தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன். வறுமையில் வாழும் தொகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆலோசனையையும், ஆதரவையும் பெற்று நிறைவேற்றுவேன் என த.அறிவுச்செல்வன் தெரிவித்தார்.  அரசியல் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர், முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலர் வேல்முருகன், மாவட்ட நிர்வாகிகள் சேரலாதன், குருசேவ் ஆகியோர் உடனிருந்தனர்.

புவனகிரி சட்டமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வன் வேட்பு மனு தாக்கல்

கடலூர்:
 
               புவனகிரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வன் கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி கல்யாணத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது பா.ம.க. மாநில சொத்துப்பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, கம்மாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஞானமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாறன், புவனகிரி ஒன்றிய குழு தலைவி தனலட்சுமி கலைவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.  
பின்னர் பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வன்  கூறியது:-


                 மிகவும் பின்தங்கிய தொகுதியான புவனகிரி தொகுதியில் உள்ள மக்களின் முன்னேற்றத்துக்காக நான் பாடுபடுவேன். புவனகிரி தொகுதியில் சென்ட் தொழிற்சாலை, மகளிர் அரசு கலைக்கல்லூரி, புத்தூர் பகுதியில் மணிமுக்தாற்றின் குறுக்கே பாலம் அமைக்கவும், இணைப்பு சாலைகள் அமைக்கவும் குரல் கொடுப்பேன். அதேபோல் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை கிடைக்கவும், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாங்கி தரவும் பாடுபடுவேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

                அப்போது வேல்முருகன் எம்.எல்.ஏ., பா.ம.க. மாநில துணை தலைவர் சண்முகம், துணைப் பொதுச்செயலாளர் திருமால்வளவன், முதனை செல்வராஜ், தேவதாஸ் படையாண்டவர், முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் திருஞானம் ஆகியோர் உடன் இருந்தனர்.

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. மனு தாக்கல்

கடலூர் : 

        புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் உட்பட ஐந்து பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர். புவனகிரி தொகுதி பா.ம.க., வேட்பாளர் அறிவுச்செல்வன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி கல்யாணத்திடம் நேற்று மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக சாத்தமங்கலம் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். இதேதொகுதிக்கு லோக் ஜனசக்தி சார்பில் சிதம்பரம் கமலக்கண்ணன், சுயேச்சைகளாக கம்மாபுரம் சவுந்தரராஜன், கீரப்பாளையம் முருகன் ஆகியோர் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதுவரை இத்தொகுதியில் ஐந்து பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.