காஞ்சிபுரம் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காஞ்சிபுரம் மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காஞ்சிபுரத்தில் பா.ம.க.சுவர் விளம்பரம் மீது அ.தி.மு.க சுவரொட்டிகள்: மாவட்டச் செயலர் சங்கர் தலைமையில் சாலை மறியல்

காஞ்சிபுரம் : 

          சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பா.ம.க.,வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. 

          காஞ்சிபுரத்திலிருந்து பரந்தூர் செல்லும் சாலையில், காரை கிராமம் உள்ளது. இங்கு, சாலையோரம் தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் சுற்றுச் சுவரில், பா.ம.க.,வினர் சுவர் விளம்பரம் செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, காரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய இணைச் செயலர் ராஜேஷ் சார்பில், அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பா.ம.க.,வின் சுவர் விளம்பரத்திலிருந்த ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் உருவப்படத்தின் மீதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 

             இதையறிந்த பா.ம.க.,வினர், காரை கிராமத்தில் மாவட்டச் செயலர் சங்கர் தலைமையில் ஒன்று கூடினர். பகல் 12 மணிக்கு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியல் செய்ய ஊர்வலமாகச் சென்றனர். பின் தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடம் சென்று போஸ்டர் ஒட்டியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.



திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி

http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/2a38742c-bd49-4483-b6cf-6015f49bbb41_S_secvpf.gif

செங்கல்பட்டு:

             காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கூடுவாஞ்சேரியில் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் என்.எஸ். ஏகாம்பரம் வரவேற்றார். மோகனசுந்தரம், அரங்க நாதன், கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் பா.ம.க.  நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-

               மக்களை நம்பித்தான் பா.ம.க.வை துவங்கி உள்ளோம். சமச்சீர் கல்வியை 20 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவர நான் போராடினேன். அதை நிறைவேற்றுவதை நான் வர வேற்கிறேன். தமிழகத்தில் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு மதுக்கடைகளை திறந்து இளைஞர்களை குடிமகன்களாக்கி வருகிறது. விதவைகள் அதிகரிக்க இதுவே காரணம்.

            பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. 75 கோடியை இறைத்து வெற்றி பெற்றது. ஆனால் நாம் 42 ஆயிரம் ஓட்டுகளை பெற்று 2-ம் இடத்தை பிடித்தோம். அங்கு தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்துவிட்டது.  மறைமலைநகர் அருகே துணை நகரம் கொண்டுவர நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதையும் மீறி தமிழக அரசு இங்கு உள்ள விளை நிலங்களை வெளி நாட்டினருக்கு தாரைவார்த்தது. ஏரி மாவட்டமாக இருந்த காஞ்சீபுரம் மாவட்டம் சோறு போடும் மாவட்டமாகவும் இருந்து வந்தது. தொழிற்சாலைகள், வீட்டு மனைகள் என்ற பெயரில் காஞ்சி மாவட்டத்தையே தமிழக அரசு காடாக மாற்றிவிட்டது.

             ஆடு, மாடுகள் மேய்ந்து வந்த மேய்ச்சல் நிலங்கள் காணவில்லை. விவசாயிகள் நாங்கள் வாழ்வதா சாவதா என அரசை கேள்வி கேட்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட உள்ளது. அதற்காக கட்சியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள் இன்று முதல் மக்களிடம் சென்று மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து போராட வேண்டும்.  இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

               மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் வ.கோ.ரங்கசாமி, மாசிலாமணி, ஒன்றிய குழு தலைவர் வாசு, மறைமலைநகர் நகரமன்ற தலைவர் சசிகலா ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி பாமக ஆர்பாட்டம்

காஞ்சிபுரம்:

            சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 357 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

            காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாமக மாவட்ட செயலர் சங்கர் தலைமை தாங்கினார். சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும், மாணவர்களுக்கு உடனடியாக பாட புத்தகங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாமக-வினர் வலியுறுத்தினர். சமச்சீர் கல்விக்காக தமிழகம் முழுவதும் மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டம் நடத்தும் சூழ்நிலை உள்ளது. வாக்களித்த மக்களுக்கு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கல்வியை மறுப்பதும், மாணவர்களின் கல்வியில் விளையாடுவதும் கண்டிக்கத்தக்கது என்று பாமகவினர் தெரிவித்தனர்.

           ஆர்ப்பாட்டத்திற்கு  அனுமதி மறுக்கப்பட்டதால்    போலீசார்  கைது செய்தனர். காஞ்சிபுரத்தில் 110 பேரும், மாவட்டம் முழுவதும் 357 பேரும் கைது செய்யப்பட்டனர்.காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சக்தி பெ.கமலாம்பாள், மாவட்ட தலைவர் குமாரசாமி, நகர செயலர் முத்துசெல்வம், நகர தலைவர் உமாபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக இளைஞர் சங்கச் செயல் வீரர்கள் கூட்டம்

காஞ்சிபுரம்:

               தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு ஏற்பட்ட தோல்வி நிரந்தரமானதல்ல என்று பாமக மாநில இளைஞர் சங்கச் செயலர் அறிவுச்செல்வன் பேசினார்.

          காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக இளைஞர் சங்கச் செயல் வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாநில இளைஞர் சங்க துணைச் செயலர் பராதிதாசன் தலைமை தாங்கினார். 

மாநில இளைஞர் சங்கச் செயலர் த.அறிவுச்செல்வன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது:

             இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி வாக்களித்தனர். இந்த வாக்குகளால்தான் பாமகவுக்கு தோல்வி ஏற்பட்டது. இந்த தோல்வி நிரந்தரமானது கிடையாது.  கடந்த தேர்தல்களில் படு தோல்வியுற்ற ஆளுங்கட்சிகள்கூட மீண்டும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் பல இடங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 70 ஆயிரம் பேர் பாமகவுக்கு வாக்களித்துள்ளனர். 

             எனவே சட்டப் பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு ஏற்பட்ட தோல்வி நிரந்தரமானது கிடையாது என்றார். இக் கூட்டத்தில் பாமக மாநில துணைச் செயலர் பொன்.கங்காதரன், மாவட்டத் தலைவர் குமாரசாமி, மாவட்டச் செயலர் பரந்தூர் சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பு

மாநில துணைப் பொதுச் செயலர் பொன்.கங்காதரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி

          காஞ்சிபுரம் மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் 21.07.2011 அன்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,




          தமிழ்நாட்டில் நடப்பது அரசியலே அல்ல, அரிசியல். ரூபாய்கு 3 படி அரிசி, ரூபாய்க்கு ஒரு படி அரிசி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இப்போது 20 கிலோ இலவச அரிசி என்று அரசியல் இப்போது அரிசியலாக மாறியுள்ளது. இலவச மிக்ஸி கிரைண்டர், டி.வி. கொடுப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. கல்வியும், மருத்துவமும் தவிர வேறு எதையும் இலவசமாக கொடுக்கக்கூடாது. கல்வியை இலவசமாக கொடுத்து, வேலைவாய்ப்பை உருவாக்கினால், இலவசமாக கொடுக்கும் பொருள்களை அவர்களே வாங்கிக் கொள்வார்கள்.

             சங்க காலத்தில் தமிழர்கள் வீரத்துடன் போருக்கு சென்றனர். தற்போது தமிழர்கள் பாருக்கு செல்கின்றனர். கல்விக் கூடங்களை அரசு நடத்த வேண்டும். ஆனால் அது தனியாரிடம் விடப்படுகிறது. ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. இதனால்தான் போருக்கு சென்ற தமிழன் பாருக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. விவசாயிகள் பலர் நகப்புறங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

            விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்படுகின்றன. எந்தக் காரணத்துக்காகவும் விவசாய நிலங்களை எடுக்கக் கூடாது என்று நாங்கள் விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் பாமக தோல்வி அடைந்ததற்கு பலர் பல்வேறு காரணங்களை கூறினர். இளைஞர்கள் நம் கட்சியில் இருந்திருந்தால் இந்தத் தோல்வி நமக்கு ஏற்பட்டிருக்காது. உடனடியாக அவர்களை கட்சியில் சேர்க்கும் முயற்சியில் இறங்குங்கள் என்றார்.