தமிழக இளைஞர்கள் பாமகவில் இணைந்தால் கோபாலபுரத்துக்கும் போயஸ் தோட்டத்துக்கும் செல்லத் தேவையில்லை: பாமக நிறுவனர் ராமதாஸ்

திண்டிவனம்:

 
            தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களும் நமது கட்சியில் இணைந்தால் நாம் கூட்டணியில்லாமல் தனித்து நின்று 100 இடங்களில் வெற்றி பெறலாம். அப்படி ஒரு நிலை வந்தால் நான் ஏன் கோபாலபுரத்துக்கும், போயஸ் தோட்டத்துக்கும் செல்ல வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

             மரக்காணம் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு ஒன்றியங்களைச் சேர்ந்த அதிமுக, திமுக கட்சியினர் உள்பட தேமுதிக மாவட்ட தொண்டரணிச் செயலர் குமாரசாமி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாûஸ சனிக்கிழமை சந்தித்து பாமகவில் இணைந்து கொண்டனர்.

இவர்களை சந்தித்து பேசிய ராமதாஸ் மேலும் கூறியது:

              ல்வேறு கட்சியில் இருந்து தற்போது பாமகவில் சேர்ந்துள்ளனர். இவர்களை நான் வரவேற்கிறேன். 2020-ல் தமிழகம் எப்படி இருக்க வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையுடன் 2007-ல் ஒரு புத்தகம் வெளியிட்டோம். அதே போல் வறுமை ஒழிப்பு, விவசாயம், அனைத்து குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை என்பதை பற்றியெல்லாம் பாமக சார்பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒவ்வொரு ஆண்டும் மாதிரி பட்ஜெட் போடும் ஒரே கட்சி பாமகதான். 

                தமிழக அரசு சார்பில் 26-வது ஆண்டு அறிக்கையை வாணிபக் கழகத்தின் மூலம் வெளியிட்டுள்ளனர். இதில் டாஸ்மாக் விற்பனை பற்றியும் அதன் வருவாய் குறித்தும் உள்ளன. கொள்கையில்லாத கட்சிகளுக்கு வறுமை ஒழிப்பு பற்றிய கவலை இல்லை. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களும் நமது கட்சியில் இணைந்தால் நாம் தனித்து நின்றாலும் 100 இடங்களில் வெற்றி பெறலாம். அப்படி ஒரு நிலை வந்தால் நான் ஏன்  கோபாலபுரத்துக்கும், போயஸ் தோட்டத்துக்கும் செல்ல வேண்டும் என்றார்.

                     நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர் ஏழுமலை வரவேற்புரை வழங்கினார். மாநில பொதுச் செயலர் வடிவேல் ராவணன், துணை பொதுச் செயலர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சங்கர், மாவட்டப் பொருளர் சந்தியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் சுந்திரமூர்த்தி, பாமக ஒன்றியச் செயலர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: