விருத்தாசலம் நகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருத்தாசலம் நகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் 7வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு


பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

           அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பல் போட்டியிடும் வேட்பாளர்களின் 7வது பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது.

மாநகராட்சி மேயர்

வேலூர் - ரூபாவதி மகாத்மா
நெல்லை - சண்முகப்பிரியா
கோவை - கே.இராஜேந்திரன்

நகராட்சித் தலைவர்கள்

மறைமலைநகர் - து.மூர்த்தி (முன்னாள் எம்எல்ஏ)
விருத்தாசலம் - வ.க.முருகன்
திண்டுக்கல் - சுப. கோபாலகிருஷ்ணன்
பழனி - வைரமுத்து
கோபி - அஸ்ரீம் பேகம்
தாராபுரம் - ஜி.காஞ்சனா
காங்கேயம் - பி.பிரபாகரன்
நாகர்கோவில் - அமுதா கணேஷ்

விருத்தாசலம் நகராட்சித் தலைவர் பதவி: பாமக வேட்பாளர் வ.க.முருகனின் வெற்றி வாய்ப்பு ஒரு அலசல்

         விருத்தாசலம் நகராட்சித் தலைவர் பதவிக்கு 2001 - 2006ஆம் ஆண்டு கண் மருத்துவர் வள்ளுவன், பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஊழல் லஞ்சம் இல்லாத நேர்மையான நகராட்சியாக செயல்படுத்தி அன்னா ஹசாரேவுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தார் என பெயர் பெற்றார் வள்ளுவன்.
             இந்த நிலையில் கடந்த முறை பாமக வேட்பாளராக வ.க.முருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது மீண்டும் பாமக வ.க.முருகனை விருத்தாசலம் நகராட்சித் தலைவர் பதவிக்கு களம் இறக்கியுள்ளது. 



தட்சிணாமூர்த்தி



ஆர்.டி.அரங்கநாதன்



கண் மருத்துவர் வள்ளுவன்



வ.க.முருகன்




ஆனந்த கோபால்


            திமுக தரப்பில் துணைச் சேர்மேன் தட்சிணாமூர்த்தி, அதிமுக தரப்பில் முன்னாள் எம்எல்ஏவும் 2001ல் டாக்டர்
வள்ளுவனிடம் போட்டியிட்டு வெற்றியை இழந்தவருமான ஆர்.டி.அரங்கநாதனும், தேமுதிக சார்பில் நகர பொருளாளர் ஆனந்த கோபால் ஆகியோர் விறுவிறுப்போடு போட்டி களத்தில் இறங்கியுள்ளனர்.
           விஜயகாந்த எம்எல்ஏவாக அடையாளம் காட்டிய தொகுதி விருத்தாசலம். அவரைத் தொடர்ந்து அவரது கட்சியைச் சேர்ந்த முத்துக்குமார் எம்எல்ஏவாக ஆகி, அந்த தொகுதியை தக்க வைத்துக்கொண்டார். நகராட்சி தலைவர் பதவியையும் தேமுதிமுக கைப்பறுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதற்கிடையே ஆளும் கட்சியான அதிமுக தரப்புக்கும், திமுகவுக்கும் கடும் போட்டியும் உள்ளது. இருப்பினும் பாமக விருத்தாசலம் நகராட்சியை தக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கைஉள்ளது.