விருத்தாசலம் நகராட்சித் தலைவர் பதவிக்கு 2001 - 2006ஆம் ஆண்டு கண் மருத்துவர் வள்ளுவன், பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஊழல் லஞ்சம் இல்லாத நேர்மையான நகராட்சியாக செயல்படுத்தி அன்னா ஹசாரேவுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தார் என பெயர் பெற்றார் வள்ளுவன்.
இந்த நிலையில் கடந்த முறை பாமக வேட்பாளராக வ.க.முருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் பாமக வ.க.முருகனை விருத்தாசலம் நகராட்சித் தலைவர் பதவிக்கு களம் இறக்கியுள்ளது.
இந்த நிலையில் கடந்த முறை பாமக வேட்பாளராக வ.க.முருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் பாமக வ.க.முருகனை விருத்தாசலம் நகராட்சித் தலைவர் பதவிக்கு களம் இறக்கியுள்ளது.
தட்சிணாமூர்த்தி
ஆர்.டி.அரங்கநாதன்
கண் மருத்துவர் வள்ளுவன்
வ.க.முருகன்
ஆனந்த கோபால்
திமுக தரப்பில் துணைச் சேர்மேன் தட்சிணாமூர்த்தி, அதிமுக தரப்பில் முன்னாள் எம்எல்ஏவும் 2001ல் டாக்டர் வள்ளுவனிடம் போட்டியிட்டு வெற்றியை இழந்தவருமான ஆர்.டி.அரங்கநாதனும், தேமுதிக சார்பில் நகர பொருளாளர் ஆனந்த கோபால் ஆகியோர் விறுவிறுப்போடு போட்டி களத்தில் இறங்கியுள்ளனர்.
விஜயகாந்த எம்எல்ஏவாக அடையாளம் காட்டிய தொகுதி விருத்தாசலம். அவரைத் தொடர்ந்து அவரது கட்சியைச் சேர்ந்த முத்துக்குமார் எம்எல்ஏவாக ஆகி, அந்த தொகுதியை தக்க வைத்துக்கொண்டார். நகராட்சி தலைவர் பதவியையும் தேமுதிமுக கைப்பறுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதற்கிடையே ஆளும் கட்சியான அதிமுக தரப்புக்கும், திமுகவுக்கும் கடும் போட்டியும் உள்ளது. இருப்பினும் பாமக விருத்தாசலம் நகராட்சியை தக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கைஉள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக