காரிமங்கலம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பா.ம.க வேட்பாளர் ஏ.சத்யா வெற்றி

தருமபுரி:

      காரிமங்கலம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.சத்யா  2,194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

           சுயேச்சை வேட்பாளர் எம்.சந்திரிகா (1,885 வாக் குகள்) 2-வது இடத்தையும், திமுக சீ.ஜெயந்தி (1,371) 3-வது இடத்தையும், அதிமுக ஜி.ஒச்சம்மாள் (977) 4-வது இடத்தையும், தேமுதிக சி.பூங்கொடி (190) 6-வது இடத்தையும் பெற்றனர்.

மொத்தமுள்ள 15 வார்டுகளில் 

அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகியவை தலா 3 இடங்களையும், 
சுயேச்சைகள் 4 இடங்களையும், 
பாமக ,தேமுதிக, ஆகியவை 
 தலா 1 இடத்தையும் கைப்பற்றின.

செந்துறை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் கண்ணகி வெற்றி

செந்துறை:
          அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட 12-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் கண்ணகி அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி, தி.மு.க. சார்பில் குழந்தை அம்மாள்,  உள்பட 5 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் இருந்தே தி.மு.க., பா.ம.க.வுக்கும் இடையே இழுபறி நிலை உருவானது.
 
                 முடிவில் 2 கட்சிகளுமே சம ஓட்டுகள் பெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் 3847 ஆகும். இதில் பா.ம.க. 1310 வாக்குகளும், தி.மு.க. 1303 ஓட்டுகளும் பெற்றது. தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டதில் பா.ம.க.வுக்கு 7 ஓட்டுகளும், தி.மு.க.வுக்கு 14 வாக்குகளும் கிடைத்ததால் சமநிலை ஏற்பட்டது.  எனவே ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட்டது. அப்போதும் 2 கட்சிகளும் சமநிலையில் இருந்தது. உடனே குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. இதில் பா.ம.க. வேட்பாளர் கண்ணகி வெற்றி பெற்றார். மாவட்ட கவுன்சிலர் 1-வது வார்டு பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் குணசேகரன் தேர்வானார். 5-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றார்.

திட்டக்குடி பேரூராட்சியில் பா.ம.க.விற்கு இரண்டாம் இடம்

திட்டக்குடி, : 

        திட்டக்குடி பேரூராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் நீதிமன்னன் 2 ஆயிரத்து 119 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ம.க., வேட்பாளர் முருகேசன் இரண்டாம் இடம் பெற்றார்.

           திட்டக்குடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு 11 பேர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க., வேட்பாளர் நீதிமன்னன் 5,329 ஓட்டுகள் பெற்று பா.ம.க., வேட்பாளர் முருகேசனை விட 2,119 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பா.ம.க., முருகேசன் 3,210,
தி.மு.க., பரமகுரு 2,366, 
த.மு.தி.க., வினாயகம் 458,
காங்., செல்லமுத்து 118, 
பா.ஜ., ரவி 98, 

சுயேச்சைகள் 

செந்தில் 167,
ராதாகிருஷ்ணன் 146,
சுயேட்சைகள் அருள்நிதி 109, 
உத்தமராஜா 39, 
கார்த்திகேயன் 23 ஓட்டுகள்
பெற்றார்.

மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 

அ.தி.மு.க., 11, 
தி.மு.க., 2, 
பா.ம.க., - தே.மு.தி.க., தலா ஒன்று, 
சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்றனர். 
 
 
 
 
 
 
 

குறிஞ்சிப்பாடி ஒன்றியம் 10வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாய்ப்பு அளியுங்கள்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், 10வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிடும் திருமதி.ஜெயக்கொடி விஜயகாந்தி அவர்களுக்கு மாங்கனி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
Election Date: 19/11/2011

தேர்தல் நாள் : 19/11/2011

சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி சார்பில் உயர்நீதி மன்றத்தில் மனு

சென்னை:

         
பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி  சார்பில் மூத்த வக்கீல் பி. வில்சன், வக்கீல்கள் என். ஜோதி, கே. பாலு, தண்டபாணி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் கியோர் முன் ஜராகி முறையீடு செய்தனர்.

அப்போது வக்கீல் பி. வில்சன், வக்கீல்கள் என். ஜோதி, கே. பாலு, தண்டபாணி
கூறியது:- 

              சென்னை மாநகராட்சி தேர்தலில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதை தடுக்க மாநில தேர்தல்
ணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ளுங்கட்சிக்கு தரவாக தேர்தல் ணையாளர் சோ. அய்யர் செயல்பட்டுள்ளார். ஐகோர்ட்டு உத்தரவை மாநில தேர்தல் ணையம் முழுமையாக செயல்படுத்தவில்லை. கவே சோ. அய்யர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், தேர்தல் ணைய செயலாளர் சேவியர் கிறிஸ்சோ நாயகர் கியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும்.

            வன்முறை சம்பவங்கள் குறித்து தேர்தல்
ணையம், காவல்துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வீடியோ படம் எடுக்கப்படாத வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது.   18 வார்டுகளில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல் சம்பவம் நடந்துள்ளன. இதனால் மக்கள் பீதி அடைந்து வாக்களிக்க முன் வரவில்லை. ஆகவே ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்கவேண்டும். சென்னை மாநகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் முறையிட்டனர்.  

            இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இது குறித்து மனு தாக்கல் செய்யும்படியும், அந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

திண்டிவனம் காந்திசிலை அருகில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இறுதி கட்ட பிரசாரம்

திண்டிவனம்:

            திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான் பாமகவின் தற்போதைய கொள்கை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனம் காந்திசிலை அருகில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி கட்ட பிரசாரத்தில் பாமக நகராட்சித் தலைவர் பதவி வேட்பாளர் மற்றும் உறுப்பினர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து ராமதாஸ் பேசியது: 

          ""திண்டிவனம்நகரில் இது வரை எந்த நல்ல திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. திராவிட கட்சிகள் 44 ஆண்டுகள் நகராட்சியை ஆட்சி செய்துள்ளன. நல்ல திட்டங்கள் ஏதேனும் அவர்கள் செயல்படுத்தியிருந்தால் நானும் அவர்களுக்கே வாக்களிப்பேன். ஆனால் இது வரை அவர்களால் ஏமாற்றமே கிடைத்துள்ளது. புதிய திண்டிவனம் நகரத்தை பாமக உருவாக்கும் என நான் பல முறை உங்களுக்கு வாக்குறுதி அளித்தும் வாக்காளர்கள் அதைக் கேட்கவில்லை. இப்போது நகரில் நல்ல குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட்டாமல் உள்ளன. மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

            பாமக நகராட்சித் தலைவர் வேட்பாளர் மலர்சேகர் (எ) குணசேகரனை வெற்றி பெற செய்தால் என்னுடைய நேரடி பார்வையில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் துரிதமாக நடைபெறும். உங்களுக்கு பணி செய்ய பாமக சார்பில் நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து அவர்களது சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பாமக-வின் தற்போதைய கொள்கை திராவிடக் கட்சிகளை வேரறுப்பதுதான். தமிழ்நாட்டில் 2016-ல் பாமக ஆட்சி அமைக்கும்'' என்றார் ராமதாஸ்.நகரச் செயலர் ஜெயராஜ் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட முன்னாள் பாமக செயலர் ஏழுமலை, மாநில துணைத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.